காரைநகர் பாலத்தில் குடைசாய்ந்தது ஆட்டோ மயிரிழையில் பயணிகள் தப்பினர்

காரை நகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற முச்சக்கர வண்டியென்று பொன்னாலைப்பாலத்தில் விபத்துக்குள்ளான சம்பவத்தில் மூவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்
இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதியும் அவருடன் பயணித்துக்கொண்டிருந்த மூவரும் சிறுகாயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர்
முச்சக்கர வண்டியின் ஒரு பக்க சில்லொன்று தீடிரென்று காற்றுப்போனதால் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்டுடன் மோதி விபத்திற்குள்ளானது
இதன் போது காயமடைந்த மூவரும் உடனடியாக பொது மக்களால் காரைநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த வட்டுக்கோட்டைப்பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் விபத்தில் காயமடைந்த மூவரும் தற்போது காரைநகர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர் 


0 comments :
Post a Comment