காதலை புதுப்பிக்க மறுத்த யுவதி குத்தி கொலை: காதலன் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயற்சி
காதலை மீண்டும் புதுப்பிக்க மறுத்த காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கட்டுநாயக்க பிரதேசத்தில் இன்று இடம் பெற்றுள்ளது.
யுவதியை கொலை செய்துவிட்டு விட்டு நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்று ஆபத்தான நிலையில் காதலன் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் கட்டுநாயக்க பிரதேச்தில் இடம்பெற்றுள்ளது .
சேரத் முதியான்சலாகே சுலானி தம்மிகா ஹேரத் என்ற (26 வயது) யுவதியே தனது முன்னாள் காதலனால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டவராவார்.இவர் கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
கொலை செய்யப்பட்ட யுவதியின் முன்னாள் காதலன் என்று கூறப்படும் திஸ்ஸ மடகே தஹம் பிரியசாந்த (33வயது) என்பவர் நஞ்சருந்திய நிலையில் நீர்கொழும்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் குருணாகல சமகி மாவத்தை , வந்துராகல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
கொலை செய்யப்பட்ட பெண் கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் தொழில் செய்பவராவார். இவருக்கும் இவரை கொலை செய்த நபருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்துள்ளது.
இந்நிலையில், தனது காதலன் திருமணமானவர் என்பதை அறிந்து அந்த யுவதி காதலனிடமிருந்து ஒதுங்கி நடந்துள்ளார். ஆயினும் காதலரான நபர் தொடர்ந்தும் காதல் தொடர்பை தொடருமாறு அந்த யுவதியை வற்புறுத்தி வந்துள்ளார் .
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட யுவதி கட்டுநாயக வலான கொட பிரதேசத்தில் தான்தற்கலிகமாக தங்கியுள்ள இடத்திலிருந்து பிற்பகல் 1.40 மணியளவில் வேலைக்கு புறப்பட்டுள்ளார் .
இதனை அடுத்து, வலான லக்ஸ்மி வித்தியாலய மைதான வீதியில் வைத்து கத்தியால் குத்தியும் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளார்
இவரை கொலை செய்தார் என்று சந்தேகிக்கப்படும் இவரது காதலர், கிருமிநாசினி அருந்தி தற்கொலை செய்ய முயன்று ஆபத்தான நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment