Saturday, June 18, 2022

டக்ளசின் அதிகார துஷ்பிரயோக, கொள்ளைப்பட்டியல். பதிலளிப்பாரா சிரேஷ்ட அமைச்சர்?

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஊழல்களை புரிந்துள்ள அரசியல்வாதிகளும் அவர்களுக்கு துணைபோன அரச ஊழியர்களுமே பொறுப்புக்கூறவேண்டியவர்கள் என்ற காரணத்தினால் பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்கின்ற 225 பேரும் நிராகரிக்கப்படவேண்டியவர்கள் என மக்கள் ஒருமித்த குரலில் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஈபிடிபி எனப்படுகின்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, அரசியலினுள் பிரவேசித்ததிலிருந்து மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்ற மோசடிகளை 'இனமொன்றின் குரல்' எனப்படும் முகநூல்பக்கம் பட்டியலிட்டுள்ளது.

இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை வெறும் அவதூறுப்பிரச்சாரம் என்ற ஒற்றைச்சொல் பதிலுடன் கடந்து செல்லாது, விளக்கமான பதிலினை டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கு வழங்குவார் என்ற நம்பிக்கையில், பட்டியலை இலங்கைநெட் மிகுந்த எதிர்பார்ப்புடன் மீள்பிரசுரம் செய்கின்றது.

டக்ளஸ் புரிந்துள்ளதாக வெளிவந்துள்ள அதிகார துஷ்பிரயோக , கொள்ளைப்பட்டியல்:

1. யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் வியாபாரம் மூலம் சம்பாதித்த நான்காயிரம் மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை அரசாங்கத்திடம் மீள செலுத்த வேண்டும்.

2. பசில் ராஜபக்சே அவர்களின் முதலீட்டுடன் யாழ்ப்பாண மற்றும் கொழும்புக்கு இடையில் நடத்தபட்ட சொகுசு பஸ் வண்டி சேவையில் உழைத்த கோடிக்கணக்கான பணத்தை திறைசேரியிடம் வழங்க வேண்டும்.

3. யாழ்ப்பாண ஈ பி டி பி அலுவலகத்திற்கான முழு மின்சார நிலுவை கட்டணமான 97 லட்சத்து 16 ஆயிரத்து 120 ரூபா 40 சதம் பணத்தை உடனடியாக மீள செலுத்த வேண்டும்.

4. டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு-5, பார்க் வீதியிலும் கொழும்பு-4, லேயாஸ் வீதியிலும் சொந்தமாக இருந்த வீடுகளுக்கான தண்ணீர் கட்டணம் 1 கோடியே 19 இலட்சத்து 88 ஆயிரத்து 267 ரூபா 95 சதம் மீள செலுத்த வேண்டும்.

5. மாநகர சபைகள் கட்டளை சட்டத்திற்கும் நகர அபிவிருத்தி அதிகார சபை சட்ட விதிகளுக்கும் முரணாக கஸ்தூரியார் வீதியில் கட்டடப்பட்ட கட்டடத்தில் திருடிய கோடிக்கணக்கான பணத்தை அரச திறைசேரிக்கு மீள செலுத்த வேண்டும்.

6. யாழ்ப்பாண நகரில் ஈ பி டி பி அமைப்பு தங்களுக்கு சொந்தமான DD தொலைக்காட்சி நிறுவனத்தையும் மகேஸ்வரி நிதிய அலுவலகத்தையும் சட்டவிரோதமாக நடத்தியன் மூலம் ஏற்பட்ட இழப்பை அரசாங்கத்திற்கு மீள செலுத்த வேண்டும்.

7. யாழ்ப்பாண மாநகரசபையின் அங்கீகரிக்கப்பட்ட ஆளணிக்கு மேலதிகமாக 430 பேரை நியமனம் செய்து மாதம் தோறும் 6 மில்லியன் ரூபா பணத்தை, அதாவது ஆண்டுக்கு 72 மில்லியன் ரூபா பணத்தை மாநகர சபைக்கு மீள செலுத்த வேண்டும்.

8. சட்டவிரோத மேற்கொள்ளப்பட்ட தொண்டராசிரியர் நியமனங்கள் , சுகாதார ஊழியர் நியமனங்கள் போன்ற அரச நியமனங்களால் ஏற்பட்ட கோடிக்கணக்கான அரச நிதி இழப்பை திறைசேரிக்கு மீள வழங்க வேண்டும்.

9. அதிகாரத்தில் இருந்தபோது அபகரித்த பிரதேச மற்றும் நகர சபைக்களுக்கு சொந்தமான வாகனங்களை மீள அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

10. அரச படைகளின் உதவியுடன் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி கொலைசெய்து வசூலித்த கப்ப பணம் மீள பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கப்பட வேண்டும்.

11. வடக்கு கடலில் இழுவை மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் ஓவருவரிடமும் கப்பமாக பெறப்படும் 5,000 ரூபா பணம் மீள வழங்கப்பட வேண்டும்.

12. ஸ்ரீதர் திரையரங்கு உட்பட பொதுமக்களிடம் அபகரிக்கப்பட்ட தனியார் சொத்துக்கள் மற்றும் அதற்கான இழப்பீடுகள் உடனடியாக வழங்க வேண்டும்.

13. 1990 ஆம் ஆண்டு முதல் அப்பாவி பொதுமக்களை காட்டி கொடுப்பதற்காக அரச பாதுகாப்பு அமைச்சில் துணைப்படையாக செயல்பபட்டு சம்பளமாக பெற்ற கோடிக்கணக்கான பணத்தை உடனடியாக மீள செலுத்த வேண்டும்.

14. வீதி புனரமைப்பு உட்பட அரசின் அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை முறைகேடாக வழங்கியதன் ஊடாக அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை மீள வழங்க வேண்டும்.

15. கோவில் புனரமைப்பு என்கிற பெயரில் முறைகேடான காசோலை மோசடிகளில் ஈடுபட்டு உழைத்த பல கோடி பெறுமதியான அரச பணத்தை மீள செலுத்த வேண்டும்.

16. இது மாத்திரமின்றி தீவகத்தில் மாடு கடத்தல் தொடக்கம் இரும்பு வியாபாரம் வரை சகல சட்டவிரோத வியாபார முயற்சிகளில் உழைத்த பணத்தை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும்.

2 comments :

ஜூலியன் அல்பேர்ட். ,  June 19, 2022 at 4:57 PM  

இந்தப்பட்டியலில் ஒரு முக்கியமான விடயம் தவிர்க்கப்பட்டுள்ளது. 2009 மே 19 ல் புலிகள் தொலைத்தொழிக்கப்பட்ட பின்னர், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முக்கிய புலி உறுப்பினர்கள் பலரை பணம் வாங்கிக்கொண்டு டக்ளஸ் விடுவித்துள்ளார்.

அவ்வாறு கப்பம் வாங்கிகொண்டு விடுவிக்கப்பட்ட பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று புலிவியாபாரம் நடத்த சிலர் இன்னும் சிறிதர் தியேட்டரில் டக்ளசின் படம் பார்த்துக்கொண்டி இருக்கின்றனர். இதனால் பல முக்கிய ஈபிடிபி யினர் வெளியேறியும் உள்ளனர்.

Anonymous ,  July 25, 2022 at 10:36 AM  

'இனமொன்றின் குரல்' என்னும் முகநூலில் நாமும் பார்த்திருக்கிறோம்; யாரென்று தெரியாமல் வெளியிடும் செய்திகளை எப்படி நம்ப முடியும்? அதை எப்படி நம்புகிறீர்கள்?

'இனமொன்றின் குரல்' யார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் நிலையில் அல்லது அவர் நீங்களாக இருப்பதில் அச்செய்தியின் மீதான நம்பகத் தன்மையை வைத்து அடுத்த தளத்துக்கு நகர்த்தியிருப்பதாகத் தெரிகிறது.

இந்த தேர்தல் பாராளுமன்ற முறை அரசியலில் தமிழ் அரசியல்வாதிகளுக்குவ் டக்கி மட்டும்தான் இந்த குற்றச்சாட்டுக்குரியவராக இருந்து விடுகிறாரா?

அப்படியிருந்தால் ஏன் மற்றைய அரசியல்வாதிகள் இந்த விடயம் பற்றி சட்ட ரீதியாக, மக்களிடம் எடுத்துச் செல்வது, பாராளுமன்றத்தில் தொடர்ச்சியான கவனயீர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுதளென செய்யாததிற்கு காரணம் என்ன?

இன்றைய அரசியல் பொருவாதார நெருக்கடி போராட்டச்சூழலில் டக்கிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் 'இனமொன்றின் குரல்' மற்றும் 'இலங்கை நெற்' போராட்டத்திற்கான முன் வரிசையில் நிற்க தவறியது ஏன்?

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களோடு இணைந்து முத்தவெளி போராட்டக்காரர்கள் என்ற தலைப்பில் டக்கிக்கு எதிராக, ஆளும் தரப்பின் பங்குதாரர் என்பதற்காகவும் 'டக்கி கோ கோம்' என்ற போராட்டம் 100 நாட்களையும் தாண்டிச் சென்றிருக்க வேண்டாமா?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com