Sunday, March 14, 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 8,9 (கிறேசியன், நாவாந்துறை)

நான் கிடங்கு இருக்கும் பகுதியை நோட்டம் விடுவதையே எனது கடமையாகச் செய்து வந்தேன். குழியில் இருப்பவர்களை காலையில் ஏணிகள் வைத்து வெளியில் வரச் சொல்வார்கள். அவர்கள் வெளியே வரும்போது கையில் சொப்பிங் பை ஒன்றினைக் கொண்டுவருவார்கள். கைகளிலும் கால்களிலும் விலங்குகள் பூட்டப்பட்டிருக்கும்.

அவர்களைப் பார்த்தால் புழுதி படிந்த மேனியுடன் காய்ந்து சாம்பல் படிந்த தலையுடன் நடக்க முடியாமல் மெதுவாக கையில் பையுடன் அசைந்து அசைந்து செல்வார்கள். கையில் கொண்டு வரும் பைகளில் மலமும் சிறுநீரும் இருக்கும். ஒவ்வொருவரும் அதனைக் கொண்டு சென்று மலக்குழியில் வீசவேண்டும், பின்னர் அவர்களும் காலைக் கடனைக் கழிக்கவேண்டும்.

மீண்டும் குழியை நோக்கி நடந்து சென்று ஏணிவழியாக உள்ளே இறங்க வேண்டும். இப்படி குழிகளுக்குள் இருப்பவர்கள் புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், ஈ.பி.ஆர்.எல்.எப். ஐ சேர்ந்தவர்களும்தான் அதிகமாக இருந்தனர்.

முள்ளிக்குளம் முசல்குத்தி என்ற இடத்தில் புளொட் இயக்கத்தினர் முகாம் அமைத்து இருந்ததாகவும், அதனை இலங்கை இராணுவத்தின் துணையுடன் புலி விலங்குகள் தாக்கியதாகவும், அதில் இரு பகுதியினருக்கும் மிகுந்த சேதம் ஏற்பட்டதாகவும், இறுதியில் விலங்குகள் வெற்றிகொண்டதாகவும் அறிந்தேன்.

அப்படி முசல்குத்தி முகாமில் உயிருடன் கைது செய்யப்பட்டவர்களையும், அந்த இயக்கத்துக்கு உதவி செய்த பொதுமக்களையும் பிடித்து வந்து இந்தப் பெருங்குழிகளில் விலங்குகள் இட்டு அடைத்து வைத்திருந்தனர் இந்த விலங்குகள்.

சில முக்கிய உறுப்பினர்களைத் தனிக் குழிகளிலும் ஏனையோரை பொதுவான குழிகளிலும் வைத்திருந்தனர். இரண்டுவேளை உணவு வாழிகளில் கயிற்றைக் கட்டி இறக்குவார்கள். உண்பது, கை கழுவுவது எல்லாம் அந்தக் குழிக்குள்தான். காலை ஒரு வேளைதான் இவர்கள் வெளியே வர முடியும். அதன் பின்னர் ஏணியை எடுத்துச் சென்று விடுவார்கள். 24மணி நேரமும் அவர்கள் அந்தக் குழிக்குள்தான் இருக்க வேண்டும். குழியினுள் எதுவும் கிடையாது. இவர்கள் அனைவருக்கும் நில நிற கால்சட்டை மட்டும்தான் கொடுத்திருந்தனர். இவர்களது விலங்குகளை விலக்கிவிட்டால் கூட இவர்களால் முறையாக நடந்து செல்ல முடியாத அளவு நோய்வாய்ப்பட்டிருந்தனர்.

காலையில் கடன் கழிக்க வரும்போது அவர்களை அருகில் பார்ப்பேன். மனிதன் என்ற அடையாளங்களை இழந்திருந்தனர். அவர்கள் தாக்கப்பட்டு, வதைக்கப்பட்டு, நாட்பட்ட பிணங்கள் போல நடந்து வருவார்கள். மனிதர்கள் விலங்குகளிலும் கேவலமாக நடத்தப்படுகின்றனர் புலி என்ற விலங்குகளால், இந்தப் புலி விலங்குகளை பிற நாடுகளிலும் இந்தியாவிலும் வாழ்த்திப் பாடுகின்றனர். வெளியுலகுக்கு வேங்கைகள், உள்ளுர் மக்களுக்கு கொடிய விலங்குகள்.

இவர்கள் காலைக் கடன் கழித்து மீண்டும் குழிகளுக்குள் இறக்கிய பின்னர் புலி விலங்குகள் தங்களது இயக்கப் பாடல் என்று கூறி சில பாடல்களை பொக்ஸ் வைத்து ஒலிபரப்புச் செய்வார்கள். அவற்றில் ஒரு பாடல் என் நினைவை இன்றுவரை அகலவில்லை. அப்பாடல் பின்வருமாறு:

நடந்து வந்த பாதை தனைத் திரும்பிப் பாரடா நீ நாச வேலை செய்த பின்னர் வருந்துவாயடா அடர்ந்த காற்றில் எரியும் தியாக நெருப்புத்தானடா உன்னை ஆட்டுகின்ற சக்தியோடு எரிக்கும்தானடா

எதிரி காலில் ஏறிநின்று செருப்புமாகினாய் தமிழீழ மண்னை எண்ணை ஊற்றி நெருப்பை மூட்டினாய் கதிரை ஏறும் ஆசை கொண்டு விலையுமாகினாய் புலிவீரர் களத்தில் போகும் போது தலையுமாட்டினாய்….(2) – நடந்துவந்த

தம்பிமாரை கொன்றவர்க்கு வாழ்த்துப் பாடினாய் உன் தங்கை கற்பை தின்றவர்க்கு மாலை சூடினாய் நம்பி இருந்த எங்களுக்கு நஞ்சை ஊட்டினாய், புலி நாளை வரும் அந்த நேரம் கம்பி நீட்டுவாய் -(2) - நடந்து வந்த

இந்தப் பாடலைப் பாடியவர் தேனிசை செல்லப்பா எனக் கூறினர். தமிழகத்தில் பலர் புலிகள் சுரண்டிய பணத்தில் இவர்களும் பக்கவாட்டில் சம்பாதித்தார்கள். சிலர் வாய்கிழியப் பேசிச் சம்பாதித்தனர் ஈழத் தமிழர் பணத்தை.

செல்லப்பா என்ற நபர் தெருக்கூத்துப் பாடல்களைப் பாடித்திரிந்த நபர், சினிமாக்களிலோ அல்லது கச்சேரிகளிலோ தலைகாட்டத் தயுதியில்லாதவர், இன்று பல கோடிகளைக் குவித்து பெருவாழ்வு வாழ்கிறார். அனைத்தும் பிற நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் வழங்கியது. புலி ஏற்பாட்டில் உலகம் சுற்றி சம்பாதித்துள்ள இந்த நபர் தமிழகத்தில் இருக்கும் எங்கள் அகதி இனத்துக்கு அப்படிச் சம்பாதித்தப் பணத்தில் ஒரு ரூபாயைக் கூடக் கொடுக்காத கொடை வள்ளலாவார்.

இந்த நபரது சொந்த ஊர் சொக்கம்பட்டி, இவரது ஊருக்கு அருகில் கடையநல்லூர் என்ற இடத்தில் அகதிகள் முகாம் உண்டு. இவர் ஈழத் தமிழர் பணத்தில் பிளைப்பு நடத்தப் புறப்பட்ட இந்த 25 ஆண்டுகளில் தனது பணத்தில் ஒரு ரூபாயைக் கூட இந்த அகதிகளுக்கு வழங்கியது கிடையாது.

தமிழ் இனத்துக்குள் மோதிக் கொண்டு அழிகின்றனர். பாட்டுப்பாடி அவ்வின அழிப்பை ஊக்குவித்த இந்த மிருகமும் ஓர் கழுதைப் புலிதான்.

“நடந்து வந்த பாதையினைத் திருப்பிப் பாரடா”!

1986ல் ரெலோ இயக்கத்தவர்களை நெருப்பில் போட்டு எரித்துக்கொன்றதையும், துப்பாக்கியால் சுட்டும், கிறனைட்டை அவர்கள் மீது வீசியும் பல நூற்றுக்கணக்கான தமிழீழ விடுதலைப் போராளிகளை படுகொலை செய்து விடுதலைப் போருக்கு களங்கத்தை மட்டுமல்ல தீராத பகையினை ஏற்படுத்திய வரலாற்றை அதாவது நடந்து வந்தவரலாற்றை நீ திரும்பிப் பாரடா என்று நாம்தான் புலி விலங்குகளைப் பார்த்துக் கேட்க வேண்டும்.

ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள், பின்னர் புளொட் தோழர்கள் அதற்கு முன்னர் ஓபராய் தேவன், பின்னர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனது இயக்க அங்கத்தினர் என்று அனைத்து இயக்க இளைஞர்களையும், அவர்களது உறவினர்களையும், உதவி செய்தவர்களையும் வதை செய்து கொன்றவர்கள் மற்றவர்களுக்கு பட்டம் சூட்டி பாடல் பாடுகின்றனர். ஒவ்வொரு முறையும் இப்பாடலைக் கேட்கும் போது செல்லப்பாவின் முகத்தில் காறித் துப்பிக் கொண்டிருந்தேன் மனதுக்குள்.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று கூறுவார்கள். செல்லப்பா கொண்டாடியது மட்டுமல்ல கோடிகளையும் சேர்த்து ஓய்ந்திருக்கிறார். இந்த நாயின் ஊளைக்கு புலி விலங்குகள் அன்று கூத்தாடினர் எங்கள் கண்முன்னே!

“நீ நாச வேலை செய்த பின்னர் வருந்துவாயடா”

நாசவேலைகள் அனைத்தையும் செய்து முடித்தது புலி விலங்குகள் என்பது உலகம் அறிந்ததுதான். ஆனால் “பின்னாளில் வருந்துவாயடா” என்ற தீர்க்க தரிசனம் மிகவும் கச்சிதமாக பொருந்தியது இந்த புலி விலங்குகளுக்குத்தான். வருந்தியது இவர்கள் மட்டுமல்ல, மக்களையும் இழுத்து வந்து வருந்த வைத்தார்கள் முள்ளிவாய்க்காலில்.

நாம் மூவாயிரம் பேர் இவர்களால் துணுக்காயில் வதைக்கப்பட்டோம். நாம் அனைவரும் பல இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் நாசவேலை செய்த இவர்கள் மொத்தமாகவே வருந்தினார்கள் முல்லைத்தீவில். காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று வானொலி வைத்துக் கதறினார்கள் இவர்களும் இவர்களது புகழ் பாடிகளும். உலகமே மௌனித்து நின்றது இவர்கள் வருந்தும் போது. செல்லப்பாவின் பாட்டு இவர்களது இரக்கமற்ற கொடுஞ்செயலால் முற்றுப்பெற்றது.

தெய்வம் நின்று கொல்லும் என்பது என் கண்முன்னே நடந்தது. ஆயினும் எங்கள் மக்களும் இந்த விலங்குகளிடம் சிக்குண்டு வதைபட்டதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 9)

நாம் சிறைபட்டு இவர்களது சவக்குழிகளுக்குள் இருந்த போது எங்கள் இரத்த உறவுகள் எங்களைப் பார்க்க தினமும் புலி விலங்குகளது அலுவலகங்கள் முன்னால் காத்துக் கிடந்தனர். அங்கு இருந்த மூவாயிரம் பேரில் ஒருவரைக் கூட இந்த விலங்குகள் பார்வையிட அனுமதிக்கவில்லை. அம்மா, அப்பா, சகோதரர்கள், மனைவி, குழந்தைகள் என்று அனைத்து இளைஞர்களுக்கும் இரத்த உறவுகள் இருந்தன. இவர்களது பல அலுவலகங்களுக்கும் நாயாக அலைந்து திரிந்தனர். எங்களை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பது கூட எங்கள் உறவினருக்குத் தெரியாது.

மனித நேயமே அற்ற இந்த விலங்குகளா எங்கள் இனத்துக்கு விடுதலை பெற்று வாழவைக்கப் போகின்றனர்? மனித உரிமைகள் என்றால் என்னவென்றே தெரியாத இந்த மிருகங்கள் தமிழினத்தை வன்னியில் விலங்குகளாக மாற்றிக்கொண்டிருந்தனர்.

“கதிரை ஏறும் ஆசை கொண்டு விலையுமாகினாய்” ஏனைய அனைத்து இயக்கங்களையும் கதிரை ஏறும் ஆசை கொண்டு வதைக்கவில்லை? அழிக்கவில்லை? 1983 முதல் அனைத்து இயக்கங்களும் போர் முனைக்குச் செல்லத்தான் தயாரித்துச் செயல்பட்டன. கதிரை ஆசை யாருக்கும் அப்போது வரவில்லை. கதிரை ஆசை வந்தது புலி விலங்குகளுக்குத்தான். போட்டிக்கு இயக்கங்கள் இருந்தால் தானே கதிரைக்கும் போட்டி வரும். அனைத்து இயக்கங்களையும் அழித்துவிட்டால் எனக்கு மட்டும்தானே கதிரை! மொத்தமாகவே தமிழ் இளைஞர்களையும் தமிழினத் தலைவர்களையும் அழித்த விலங்குகள் கதிரைக்கு ஆசைப்படுவது ஏனைய இயக்கங்கள் என்று கதை சொல்லிப் பாட்டுப்பாடுகின்றனர். என்ன கொடுமை இது! பாவத்தை இரக்கமின்றிச் செய்து கொண்டு பழியைப் பிறர்மீது சுலபமாக விதைத்தனர் பாடல் வழியாக!

“உன் தங்கை கற்பைத் தின்றவர்க்கு மாலை சூட்டினாய்”

எந்த மனிதனாவது தனது தங்கையைக் கற்பழித்தவனுக்கு மாலை சூட்டுவானா? ஐ.பி.கே.எப். கற்பழித்தது, ஏனைய இயக்கங்கள் மாலை சூட்டினர் என்பதுதான் இந்தப் பாடல் வரிகள். “கவிதைக்குப் பொய்யழகு” என்று தமிழகத்தில் ஒருவர் பாடினார். இந்த விலங்கும் பொய்யையே கவிதையாக்கி ஏனைய விலங்குகளிடம் கைத்தட்டல் பெற்றிருப்பார். ஐ.பி.கே.எப். தமிழ் பெண்களைக் கற்பழிப்பதற்காக ஈழத்துக்கு வரவில்லை. மாலை போட்டு வரவேற்றது புலிகள்தான். அமைதியை நிலைநாட்டி தமிழருக்கென்று மாநில அரசொன்றை உருவாக்கி நிர்வாகத்தைத் தமிழரே, தமிழர் பகுதிகளில் நடத்திட ஓர் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்த அமைதிபடை வந்தது. புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது துப்பாக்கியை ஐ.பி.கே.எப். க்கு எதிராக திருப்பினால் ஏனைய இயக்கத்தவர்களும் துப்பாக்கியை அவர்களுக்கு எதிராகத் திருப்ப வேண்டும் என்று எதிர்பார்த்தாரா? எந்த நியாயத்தை வைத்து இந்த விலங்குகள் எதிர்பார்த்தனர்?

கதிரை ஆசைக்காக ரெலோ இயக்க அங்கத்தினரை படுகொலை செய்தீர்கள். எனவே ஏனைய இயக்கத்தினரும் ரெலோ இயக்கத்தினரைக் கொலை செய்ய வேண்டுமா? ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தினரைக் கொன்றார்கள் ஏனையோரும் மதிகெட்டு அப்படிச் செய்ய வேண்டும் என்றா எதிர்பார்த்தனர்?

பிரபாகரன் என்ன நினைக்கிறாறோ அதனைச் செய்ய வேண்டும். இல்லையெனில் அனைவரும் துரோகிகள். பிரபாகரனுக்கோ அல்லது புலிகளுக்கோ முடிசூட்டும் பணிக்காக நாம் விடுதலை கோரவில்லை! தமிழ் இனத்தின் விடுதலைக்காகத்தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் திலகமிட்டு அனுப்பினர். அப்படி அனுப்பப்பட்ட பிள்ளைகளை எண்ணை ஊற்றி எரித்துவிட்டு தேவாரம் பாடி மக்களை ஏமாற்றினார்கள் அன்று. தமிழ் இனத்துக்கு எதிரான வன்கொடுமை ஒரு புறம் நடக்க, மறுபுறம் தமிழின உணர்வுப் பிரசாரம் செய்து பணம் பார்த்தார்கள் பிறநாடுகளில்.

ஐ.பி.கே.எப். தமிழர்களைத் தாக்கவுமில்லை, அழிக்கவுமில்லை, எப்போது புலிவிலங்குகள் அவர்கள் மீது தாக்குதல் தொடுத்தார்களோ அப்போதுதான் அவர்கள் திருப்பித் தாக்குவதற்கு ஆரம்பித்தார்கள். புலேந்திரன், குமரப்பா உள்பட 12 புலிகள் இலங்கைக் கடற்பகுதியில் வைத்து சிங்களக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டு இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கை இராணுவம் வடக்கு கிழக்கில் தமிழர்களைக் கைது செய்யக் கூடாது என்று இந்தியாவின் உத்தரவு. கடல் பகுதியில் வைத்து கைது செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என்ற உத்தரவு ஒப்பந்தத்தில் இல்லை. எனவே கடற்படை ஒப்படைத்த நபர்களை விசாரிக்க கொழும்புக்கு கொண்டு செல்லப்போகிறோம் என்று இலங்கை இராணுவம் முயற்சிகள் மேற்கொண்டது. அதை மறுத்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தது.

இந்த வேளையில்தான் புண்ணியவான்களான பாலசிங்கமும், மாத்தையாவும் அந்தக் கைதிகளைச் சந்திப்பதற்கு இந்தியாவிடம் வற்புறுத்தி அனுமதி பெற்று பார்க்கச் சென்றனர். அவர்களுக்கு உண்ண உணவும் கொடுத்துக் கூடவே சைனைட் குப்பிகளையும் கொடுத்து ‘தலைவர் உத்தரவு” சாப்பிட்டுச் செத்துப் போங்கள் என்று ஆசி வழங்கிவிட்டு வந்தனர். அவர்கள் உண்டார்கள், இறந்தார்கள்!

புலிகளது கொள்கைப்படி, படைப்பிரிவுகளிடம் அகப்பட்டுக்கொண்டால் விஷக்குப்பியைக் கடித்துத் தின்று இறந்துவிட வேண்டும். ஆகவே புலேந்திரன் குமரப்பா மற்றும் புலிகளும் கடற்படையிடம் சிக்குண்ட போதே குப்பியைக் கடித்து இறந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை! அப்படியாயின் அவர்கள் வாழவேண்டும் என்று நினைத்துள்ளனர். அவர்களிடமிருந்த குப்பிகளை கடற்படையினர்தான் அகற்றி எடுத்தனர். இவர்கள் இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர்தான் திருமணம் செய்திருந்தனர். அத்திருமணங்களை தாலி எடுத்துக் கொடுத்து வாழ்த்தி நடத்திவைத்தவர் தலைவர் பிரபாகரன்தான். எனவே அவர்கள் தற்கொலை செய்ய விரும்பவில்லை. தங்கள் குடும்பத்தினருடன் வாழ்வதற்கே விரும்பினர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திவைத்த இந்தத் திருமணங்களுக்கு மணப்பெண் வீட்டார் சார்பில் மணப்பெண்களை அழைத்து வந்து மணமேடை ஏற்றியவர்கள் அமைதிப்படையினர்தான் என்றால் நம்பவா போகின்றனர் புலிவிலங்குகள்.

(தொடரும்…)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com