Friday, July 3, 2020

75 கள்ளவாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோருகின்றார் செலஸ்ரின்.

2004 ம் ஆண்டு தேர்தல் இடம்பெற்றபோது இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களில் ஜனநாயகத்தை காப்பதற்கான எவ்வித ஏதுநிலையும் காணப்படவில்லை என்றும் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டால் அக்காலத்தில் நிழலரசாங்கம் ஒன்றை நிகழ்த்திக்கொண்டிருந்த புலிகள் தொடர்பான பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவ்வாண்டு இடம்பெற்ற தேர்தலின்போது தான் தனது கையால் மாத்திரம் 75 வாக்குகளை அளித்ததாக தெரிவித்துள்ளார்.

தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்த விடயத்தினை குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக ஏற்று இலங்கை தேர்தல் சட்டத்தின் 81 , 82 பிரிவுகளின் பிரகாரம் வழக்கினை தொடருமாறு யாழ்பாண தெரிவத்தாட்சி அலுவலரை வேண்டியுள்ளார் சட்டத்தரணி செலஸ்ரின்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடும் சட்டத்தரணி செலஸ்ரியன், இலங்கையில் சட்டம் ஒழுங்கு மீறப்படுகின்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் சுயமாக ஆஜராகி பாதிக்கப்பட்டோருக்காக சட்ட உதவிகளை வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிதரன் தொடர்பில் அவர் தெரிவத்தாட்சி அலுவலருக்கு பாரமளித்துள்ள கடிதத்தின் பிரதி கீழே இணைக்கப்பட்டுள்ளது.


Stanislaus Celestine LL.B (Col)
Attorney – at – Law
No-95, Main Street,
Jaffna.
0771-397969
Stanis69@gmail.com
02.07.2020உதவி தெரிவத்தாட்சி அலுவலர்
(முறைப்பாட்டு பிரிவு)
தேர்தல்கள் ஆணைக்குழு
யாழ்ப்பாணம்.

ஜயா!

2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 75 கள்ளவாக்குகள் போட்ட வுNயு வேட்பாளர் சிவஞானம் சிறிதரனிற்கு எதிராக சட்ட நடவடிக்கை கோரல்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் (TNA) யாழ் - கிளி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற சிவஞானம் சிறிதரன் அவர்கள் தான் 2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வேறு நபர்கள் 75 பேரின் வாக்குகளை களவாக தான் கள்ள வாக்குகள் போட்டதாக IBC Tamil என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நேர்காணலில் ஜயம்திரிபுற குற்ற ஒப்புதல் வாக்கு மூலமாக கொடுத்துள்ளார். அதற்கான இறுவட்டு (CD) ஆதாரத்தை P1 என அடையாளமிட்டு ஓர் சான்றாக தாக்கல் செய்கின்றேன்.

இவ்வாறு இன்னொருவரின் வாக்கை மோசடியாக போடுவது 1981ம் ஆண்டின் 1ம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் பிரிவு 81 மற்றும் 82ன் கீழ் 12 மாத சிறைத் தண்டனையுடன் மேல் நீதிமன்றத்தால் (High Court) தண்டிக்கப்பட வேண்டிய பாராதூரமான குற்றமாகும்.

நான் யாழ் - கிளி தேர்தல் மாவட்டத்தில் சட்டத்தை மதித்து நடந்து வரும் ஓர் கௌரவமான பிரஜை என்பதுடன் எனது சார்பில் ஓர் பாராளுமன்ற உறுப்பினராக 75 கள்ள வாக்குகள் போட்ட ஓர் மோசடிக்காரன் தேர்தலில் நிற்பதையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராக வருவதோ என் போன்ற சுயகௌரவம் உடைய பிரஜைகளால் அனுமதிக்க முடியாததாகும்.

இலங்கையின் தாய்ச்சட்டமான அரசியலமைப்பு சட்;டத்திற்கு 19ம் திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு பரந்தளவான அதிகாரங்களை கொண்டுள்ளது. குறித்த சிவஞானம் சிறிதரனின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஓர் சான்றாக ஏற்று சட்டமா அதிபரின் ஆலோசனையையும் சம்மதத்தையும் பெற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தில் போட்டியிடும் '75 கள்ளவாக்குகள் சிறிதரனிற்கு' எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தங்கள் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை கோருகின்றேன்.

குறித்த குற்றம் மேல் நீதிமன்றில் நிரூயஅp;பிக்கப்பட்டால் அவர் 7 வருடங்கள் வாக்களிக்கவும் முடியாது. தேர்தலில் போட்டியிடவும் முடியாது. ஒருவேளை இதற்கிடையில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானால்ரூபவ் அவருடைய பதவி நீதிமன்றால் அகற்றப்படவும் வேண்டும் என குறித்த சட்டத்தின் பிரிவு 82(2)ன் கீழ் கூறப்பட்டுள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

ஓப்பம்
(Stanislaus Celestine)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com