கந்தாக்காடில் நோயாளிகள் கைகலப்பில்... 05 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
கந்தக்காடு கொவிட் - 19 விசேட சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றுவருகின்ற நோயாளிகளில் இருபகுதியினரிடையே நேற்றிரவு கைகலப்பு இடம்பெற்றுள்ளது. இதில் 05 பேர் காயமடைந்துள்ளனர் என வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தோர் சிகிச்சைக்காக வெலிகந்த கொவிட் - 19 விசேட சிகிச்சை முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை சாதாரணமாக உள்ளது என பொலன்னறுவை பெரியாஸ்பத்திரிப் பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான சம்பத்த இந்திக்க குறிப்பிட்டுள்ளார்.
கந்தக்காடு சேனபுரவில் அமைந்துள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வளிக்கும் மையத்தில் இனங்காணப்பட்ட, கொரோனா தாக்கத்திற்குள்ளான இரு பகுதியினரிடையே இந்தக் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கந்தக்காடில் அமைந்துள்ள போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வு பெற்றுவரும் மையத்தில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளிகள் 279 பேரும், வெலிகந்த சேனபுரவில் அமைந்துள்ள போதைப் பொருளுக்கு அடிமையானோருக்குப் புனர்வாழ்வளிக்கும் மையத்திலிருந்து இனங்காணப்பட்ட 84 பேரும் இங்கு சிசிச்சை பெற்று வருகின்றனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

0 comments :
Post a Comment