Wednesday, June 10, 2020

வகுப்புவாதத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்... மங்கள

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் தற்போதைய அரசாங்கம் தொடர்பில் தனது தனது கருத்துக்களை புட்டுப்புட்டு வைத்துவருகின்றார். அவர் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இதோ...

வகுப்புவாதிகளால் மேற்கொள்ளப்படும் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை வன்மையாக்க் கண்டிக்கின்றேன். இனவாதிகளால் ஜனநாயகம் மீதான இனவெறி தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. அருவருப்பான இந்தச் செயலை நான் முழுமையாகக் கண்டிக்கின்றேன். இந்த நேரத்தில், அமெரிக்க காவல்துறையின் கொடூரமான சித்திரவதைகளால் ஜார்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்டது தொடர்பில் உலகின் பல பகுதிகளிலும் இன்று பேசப்பட்டு வருகிறது. மேலும், இனவாதத்தை வளர்க்கும் அல்லது மனிதகுலத்தின் சகவாழ்வைப் பாராட்டாத மனித உருவங்கள் இத்தகைய ஜனநாயக மக்களின் நடவடிக்கைகளை அடக்குவதற்கு செயல்படுகின்றன.

அரசாங்கம் நேற்று செய்தது முன்னணி சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்த நாட்டில் ஜனநாயகம் மீதான கடுமையான தாக்குதலும் ஆகும். இது எல்லா நேரங்களிலும் இனவாதத்தை பாதுகாப்பதற்கான உறுதிப்பாடாகும். வெளிப்படையாக, இது இந்த அரசாங்கத்தின் ஒரு பண்பாகவே இருக்கின்றது.

சமீப காலமாக சட்டத்தை தம்வயப்படுத்தும் சித்தாந்தத்தை ஒரு பிரச்சாரத் திட்டமாகப் பயன்படுத்திய ராஜபக்ஷமார், ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டின் சட்டத்தை கேலி செய்துள்ளனர். இந்த சட்டம் ராஜபக்ஷர்களின் நலன்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கோவிட் 19 வைரஸின் கீழான சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை ஆராய்வதன் மூலம் மட்டுமே இதை விளக்க முடியும்.

ஒரு காலத்தில் எந்தவொரு குடும்ப உறுப்பினரையும் தங்கள் உறவினர்களின் மரணத்தைக் கூட பார்க்க அனுமதிக்காத அரசாங்கம், இன்று மீண்டும் நாட்டில் மீண்டும் வெட்க்க் கேடான செயல்களை வெளிப்படுத்தியுள்ளது. இது இந்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நன்கு தெரியும்.

இருப்பினும், இந்த அரசாங்கம் தனது குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்த அனுமதிக்கக்கூடாது. இனவெறியை எதிர்ப்பதும், நியாயமான, அமைதியான போராட்டங்களை நடத்துவதும் குடிமக்களின் உரிமை என்று அரசாங்கத்திற்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

ஜனநாயக சகவாழ்வை மதிக்கும் அனைத்து குடிமக்களும் நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து, நெருக்கடியை எதிர்கொள்ளும் ஒரே அடக்குமுறை கருவியாக இருக்கும் வகுப்புவாத அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றுபட்டு அணிதிரட்ட வேண்டிய தருணத்தை அரசாங்கம் உருவாக்குகிறது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com