ரத்னஜீவன் ஹூலிற்கு எதிராக முறைபாடு
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தமது கட்சி தொடர்பில் தெரிவித்துள்ள கருத்து குறித்து விசாரணைகளை நடத்துமாறு வலியுறுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரயவசம் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் இந்த முறைப்பாட்டை கையளித்துள்ளார்
பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் வடக்கின் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் தனக்கு எதிராக ஊடகங்கள் மூலம் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக அவர் அந்த செவ்வியில் தெரிவித்திருந்தார்.
சிலர் தம்மை தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குமாறு கேட்பதாகவும், அவ்வாறு தெரிவிப்பதன் மூலம் அந்த பதவியிலிருந்து விலகலாமா? என எண்ண தோன்றுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எனினும் 19 ஆவது அரசியல் அமைப்பிற்கு இணங்க பொய் கூறுவதற்கான இயலுமை இல்லை எனவும் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.
பொய் கூறுவோரில் பிரதானமானவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு சார்பான ஊடகங்கள் என தெரிவித்துள்ள அவர், அவ்வாறானவர்கள் ஜனநாயக விரோதிகள் எனவும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நபர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தெரிவித்தாக குறித்த தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இவ்வாறான கருத்து தொடர்பிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரயவசம் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் குறித்த முறைப்பாட்டை கையளித்துள்ளார்.
0 comments :
Post a Comment