Sunday, June 14, 2020

திருமணமான பெண்களை புலிகள் கட்டாய கருக்கலைப்புக்கு உட்படுத்தினர். நாம் தமிழர் கட்சியின் ஐ.நா வுக்கான அறிக்கை

விடுதலைப் புலிகள் அமைப்பின் காவலர்களாக நாம் தமிழர் கட்சியினர் புலம்பெயர் தமிழரினால் நம்பப்படுகின்றனர். இதன் பொருட்டு அக்கட்சியின் வளர்சிக்கும் அதன் தலைவர் சீமானுக்கும் புலம்பெயர் தமிழர் பலகோடி ரூபாய்களை வழங்கிவருதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் அக்கட்சியிலிருந்து விலகிச் சென்றுள்ள முக்கியஸ்தரான வழக்கறிஞ்ஞர் சங்கிலிமுத்து சீமானின் உண்மை முகத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அவரது வெளிப்படுத்தலில் நாம் தமிழர் கட்சி ஐ.நா வுக்கு வழங்கியுள்ள அறிக்கையில் புலிகள் மேற்கொண்ட கொடுமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் , சீமான் இலங்கை அரசின் நிகழ்சி நிரலில் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது முகநூல் பதிவில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீமான்_என்னும்_சில்லறை_கடந்து__வந்த_பாதை. புதுவை_ஆர்_பி_சங்கிலி_முத்து - வழக்குரைஞர்

சீமான்_உண்மை_முகம்!!!

சீமானின் முன்னாள் ஆதரவாளன். அவரது உணர்சிகளை தூண்டும் பேச்சாலும் விடுதலைபுலிகளின் ஆதரவு நிலைப்பாட்டாலும் அவரால் கவரப்பட்டேன். பிறகு அவ‌ரை நெருக்கமாக கவனித்தபோது பல அதிர்ச்சியான உண்மைகள் தெரியவந்தன.

*எனது அனுபவத்தின் அடிப்படையில் அவரை பற்றி தெரிந்து கொண்ட விசயங்களை இங்கே தகுந்த ஆதாரங்களுடன் பகிர்ந்து கொண்டு உள்ளேன்.

*இது தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஊடகங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வந்த செய்திகளை ஆதாரமாக கொண்டு, வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். இதை மறுப்பவர்களிடம் நேர்மை இருந்தால் பதிலுக்கு வேறு ஆதரங்களை கொடுக்க வேண்டும்.

*சீமான் புலிகளுக்கு செய்த துரோகங்கள்:


ஈழப்படுகொலைக்கு பின்னர் ஐநாவின் டப்லின் தீர்பாயத்தில் நடந்த விசாரணை மிக முக்கியமானது. அதில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 41 பக்க அறிக்கையை சமர்பித்துள்ளனர். அதில் LTTE யினர் போர்குற்றம் புரிந்தனர் என்று கூறியுள்ளார் சீமான். அந்த அறிக்கையில் 40 ஆவது பக்கத்தில், "விடுதலைப் புலிகள் ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை LTTE யினர் பெற்றோரிடம் இருந்து பிடிங்கி, தங்களின் படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை LTTE யினர் செய்ததனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் LTTE யினர் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தியதாகவும், தப்பிக்க பார்த்த தமிழர்களை சுட்டு கொன்றனர்" என்று சிங்கள அரசாங்கம் பிரபாகரன் மீது கூறும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார் சீமான்.

நேரடியாக LTTE யினர் தான் போர் குற்றவாளிகள் என்று ஐ.நா விசாரணை குழுவில் வாக்குமூலம் அளித்துவிட்டு, இங்கு வந்து பிரபாகரனின் புகழ் பாடி கொண்டு இருக்கிறார் சீமான்.

*சீமானின் இந்த துரோகத்தை கண்டித்துதான் சீமான் கலந்துகொண்ட"முள்ளிவாய்க்கால் முடிவல்ல" என்ற புத்தக வெளியீட்டு விழாாவில் கலந்து கொள்ளாமல் கவிஞர் காசிஆனந்தன், த.வெள்ளையன், இயக்குனர் வ.கெளதமன் ஆகியோர் புறக்கணித்தனர். இவர்கள் தீவிரமான தமிழ் உணவாளர்கள் மற்றும் ஈழ ஆதரவாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

*சீமானின் துரோகத்துக்கு இரண்டு ஆதாரங்கள்:

1. விகடன் என்பது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பத்திரிக்கை. ஈழ இறுதிபோர் உச்சத்தில் இருந்த போது விகடன் தான் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் உண்மை செய்திகளை தைரியமாக வெளியிட்டது அனைவரும் அறிந்தது.

இப்போது கூட சீமானின் பேட்டிகளை அதிகமாக வெளியிட கூடிய வெகுஜென பத்திரிக்கை விகடன் தான். அப்படிப்பட்ட பத்திரிக்கையிலேயே விடுதலை புலிகளுக்கு எதிராக ஐநாவில் சீமான் சமர்பித்த அறிக்கை பற்றி மிக கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது பொய் என்றால் சீமான் இதற்கு மறுப்பு தெரிவித்து இருப்பார். ஏனெனில் விகடன் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் விற்பனையாகும் வார இதழ். ஆனால் சீமான் இதை பற்றி வாயே திறக்காமல் கள்ள மௌனம் சாதிக்கிறார். இதுவே அவரின் மீதான குற்றச்சாட்டை உறுதிபடுத்துகிறது. விகடன் வெளியிட்ட செய்திக்கான லிங்கை கீழே கொடுத்து உள்ளேன்

http://www.vikatan.com/news/tamilnadu/64271-students-forum-turn-against-seeman.art

2.தேவர் சமூகத்து மக்களால் நடதப்படும் பேஸ்புக் பக்கத்திலும் சீமான் ஐநாவில் சமர்பித்த அறிக்கைக்கு எதிராக சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேவர் ஜாதி மக்கள் என்ன வேற்று மொழிகாரர்களா? அவர்கள் சீமான் மேல் ஏன் அவதூறு பரப்ப வேண்டும்?

*சீமான் இப்படி பொய் சொல்ல காரணம் தாம் தான் விடுதலை புலிகளின் பிரதிநிதி என்று கூறி வெளிநாடுவாழ் தமிழர்களிடம் பணம் பறிக்க தான். சிங்கப்பூரில் விடுதலை புலிகளின் பெயரை பயன்படுத்தி முறைகேடாக பணம் வசூல் செய்த குற்றத்துக்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 5 பேர் சிங்கப்பூர் போலீசால் கைது ச‌ெ‌ய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அதற்கு ஆதாரமாக பத்திரிக்கைகளில் வந்த செய்தி

https://i0.wp.com/www.pathivu.com/app/uploads/2016/08/se.jpg

*சீமானின் இலங்கை பயண பொய்கள்:

சீமான் இலங்கைக்கு சென்றது திரைப்படம் எடுப்பது தொடர்பான பயிற்சி கொடுக்க தான்.

*இதை நடிகர் ராஜ்கிரன் ஒரு பேட்டியில் பேச்சுவாக்கில் கூறிவிட்டார். சீமான் தலைவர் பிரபாகரனை சந்தித்தது 5 நிமிடங்களுக்குள் தான்.

*பாரதிராஜா, *மகேந்திரன் போன்றோர் எற்கனவே இதேபோல் சென்று தலைவருடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.

*அதேமாதிரி தான் ஒரு இயக்குனர் என்ற அடிப்படையில் சீமானோடு ஒரே ஒரு புகைப்படம் எடுத்துள்ளார் தலைவர்.

*அதன் பிறகு பிரபாகரன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் சீமான் என்ற பெயரை உச்சரிக்கவே இல்லை. ஆனால் சீமானோ அவரோடு எடுத்த ஒரே ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு, என்னமோ இவர் தான் பிரபாகரனின் வலது கையாக செயல்பட்டது போலவும், பிரபாகரன் என்னிடம் "அதை கூறினார், இதை கூறினார்" என்று பொய் சொல்லி கொண்டு இருக்கிறார். அதுகூட‌ பரவாயில்லை, "பிரபாகரன் எனக்கு இலையில் கடல் நண்டு பரிமாறினார்" என்று எல்லாம் பேட்டி கொடுத்துள்ளார். அப்படி உண்மையிலேயே பிரபாகரனுக்கு நெருக்கமானவராக இருந்திருந்தால், "இவர் இப்போது சொல்லும் விசயங்களில் ஒன்றை கூட ஏன் தலைவர் உயிரோடு இருக்கும் போது மேடைகளில் கூறவில்லை?" ஏனெனில் உண்மையை பிரபாகரன் வெளியிட்டு விடுவார் என்ற பயம் தான் காரணம்.

ராஜ்கிரனுக்கு சீமானுடன் எந்தவித கசப்பும் கிடையாது. அவர் திரைதுரையில் ஒழுக்கமானவர் என்று பெயர் எடுத்தவர்.

*தமிழ் சினிமாவில் உள்ள ஒருவர் கூட ராஜ்கிரனை பற்றி சிறிய குறைகூட சொல்ல மாட்டர்கள். ராஜ்கிரன் எந்த கட்சியிலும் உறுப்பினரும் கிடையாது. நந்தா படத்தில் பிரச்சனை வரும் என்று சிவாஜிகணேசன் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் இலங்கை தமிழர்கள் மீது உள்ள பாசத்தால் தைரியமாக நடித்தவர் ராஜ்கிரண். எனவே அவர் பொய்யோ, அவதூறோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் சீமானின் இலங்கை பயணம் பற்றி கொடுத்த பேட்டி கீழே உள்ளது*இதுமட்டும் அல்லாது புலிகளின் தளபதி மரியாதைகுறிய அண்ணன் சூசை அவர்கள் சீமானை பற்றி பேசுவது போல போலியான ஆடியோவை யுடிப்பில் வெளியிட்டு உள்ளார் சீமான் . அப்படி அவர் உண்மையாக சீமானை பற்றி பேசி இருந்தால், அதை புலிகள் அவர்களின் அதிகாரபுர்வ வானொலியிலேயே வெளியிடுவார்கள். இதுதான் விடுதலை புலிகளின் மரபு. அனைவரும் இறந்தபின், தான் சொல்லும் பொய்யை மறுக்க யாரும் உயிரோடு இல்லை என்ற தைரியத்தில் இப்படி ஒரு கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவது நியாயமா சீமானே?

*அரசியல் விமர்சகர்கள் உங்களை "பிணம்திண்ணி" என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது ?

சீமானும் சிங்களர்களும்:

சீமானுக்கு சிங்களர்களோடு பல காலமாகவே நெருங்கிய தொடர்பு உள்ளது.
அதன் காரணமாக தான் தனது தம்பி படத்தில் ஒரு சிங்களபெண்ணை (பூஜா) ஹீரோயினாக நடிக்க செய்தார் சீமான்.

ராஜபக்சே வின் சொந்தங்கள் தயாரித்த கத்தி படத்தை தமிழகத்தில் திரையிட தமிழ் உணர்வாளர்கள் எதிர்த்தபோது "கத்தி படத்தை எதிர்க்க முடியாது" என்று வெளிப்படையாக கூறியவர் சீமான்.

*கடைசியாக ஐ.நாவின் டப்லின் தீர்ப்பாயத்தில் "விடுதலைபுலிகள் தான் தமிழர்களை கொன்றனர்" என்று ஒப்புதல் வாக்குமூலம்கொடுத்துள்ளார் சீமான். ஈழ போர் தோல்வியில் முடிந்ததும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அமைக்க முயன்றார்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள்.

ஒரு காலத்தில் நாடு இல்லாத யூதர்கள் இது போன்ற அரசை அமைத்து பிறகு இஸ்ரேல் என்ற நாட்டை பெற்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிங்கள அரசு தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்க முடிவு செய்தது. சீமானுக்கு எங்கிருந்தோ பணம் வந்து குவிந்தது. அதனால் தான் பல வருடம் அரசியலில் இருக்கும் கட்சிகளுக்கு இணையாக புதிதாக கட்சி தொடங்கிய சீமானும் சென்ற தேர்தலில் டிவிகளில் "போட்டு பார் ஓட்டை, அப்புறம் பார் நாட்டை" என்று பிரமாண்டமாக விளம்பரம் செய்தார். உலகம் முழுக்க தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் இருந்த தமிழ் அமைப்புகளில் பிளவுகள் ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்புகள் அங்கு தொடங்கப்பட்டன. அதன் பிறகு இன்று வரை உண்மையான நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமையவில்லை.

தொண்டர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், கட்சியின் கொள்கை எவ்வளவு உயர்ந்தது என்றாலும் தலைவர்கள் நல்லவர்கள் இல்லை என்றால் எல்லாம் வீண்தான். திமுக தொண்டர்கள் பலர் தமிழுக்காக மொழிப்போராட்டத்தில் உயிரையே கொடுத்தனர்.

கடைசியாக சீமானுக்கு சில கேள்விகள்:

1.சீமான் அவர்களே "ஒரு விதவை இலங்கை அகதி பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்" என்று முழங்கிவந்தீர்கள். ஆனால் திடீரென்று நீங்களே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து நல்ல வசதியான வரன் வந்ததும்(அந்த பெண் உங்களை விட 23 வருடம் வயதில் சிறியவராக இருந்தும்) அவரை திருமணம் செய்து கொண்டீர்கள். இதுதான் ஈழ தமிழர்கள் மீது உங்களுக்கு உள்ளபாசமா?

2.தலைவர் பிரபாகரனை சிறையல் அடைக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவுக்காக நீங்கள் பிரச்சாரம் செய்தது ஈழ தமிழர்களின் நலனுக்காகவா? இல்லை நடிகை விஜயலட்சுமி (ப்ரண்ட்ஸ் படத்தில் சூரியாவுக்கு ஜோடி, விஜய்யின் தங்கை) உங்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகாரில் இருந்து தப்பிக்கவா? (தைரியமாக புகார் கொடுத்தது ஒரு பெண் தான். புகார் கொடுக்காமல் மனதுக்குள் புழுங்கி கொண்டு இருப்பது எத்தனை விஜயலட்சுமிகள் என்று சீமானுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்)

3. சீமானே ஈழ தமிழர்களை பற்றி பேசுவது அவர்களின் நலனுக்கா? இல்லை உங்களின் நலனுக்கா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் 'நீங்கள் அரணையூரில் கட்டி காெண்டு இருக்கும் பங்களா வீடு, உங்களின் ஆடம்பர திருமணம், வெளிநாட்டு சுற்று பயணங்கள் ' எல்லாம் எப்படி சாத்தியமானது? நீங்கள் எடுத்த இரண்டு, மூன்று மொக்கை படங்களில் சம்பாரித்ததா? 'இதெல்லாம் ஈழ தமிழர்களிடம் இருந்து அவர்களுக்காக
போராடுவதாக கூறி ஏமாற்றி வசூல் செய்யப்பட்ட பணம் இல்லையென்று' தலைவர் மீது ஆணையிட்டு கூற முடியுமா உங்களால்?

4.நாம் தமி‌ழர் நண்பர்களுக்கு கற்பழிப்பு புகாரில் சிக்கியரை, ஈழ விதவை பெண்ணை திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டு பணத்துக்காக வேறு திருமணம் செய்தவரை, ஐ.நா விசாரணை குழுவில் “விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை சுட்டு கொன்றனர்” என்று வாக்குமூலம் கொடுத்தவரை’ போய் கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக நீங்கள் முன் வைத்தால், அதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காது.

சிறிது யோசியுங்கள் நாம் தமிழர் கட்சி நண்பர்களே சதுரங்கவேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் "பாதி உண்மையோடு பாதி பொய்யையும் கலந்து சொன்னால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது" என்று. இந்த உத்தியை பயன்படுத்தி மேடையில் உணர்ச்சி பொங்க பேசி தான் சீமான் உங்களை மூளைசலவை செய்துள்ளார்.

நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். இந்த கட்டுரையை உங்களுக்கு தெரிந்த "நாம்தமிழர்" கட்சி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் ஒருவராவது திருந்தட்டும்

அன்புடன்
புதுகை ஆர்.பி.சங்கிலிமுத்து பி எல்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com