விலங்கு உணவுகளுக்கான பற்றாக்குறை பண்ணை உற்பத்தித் துறையின் பிரதான பிரச்சினை - பந்துல
தேசிய பசும்பால் உற்பத்தியை அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதற்கான திட்டத்தை வகுப்பதற்காக நிபுணர்களின் ஆலோசனையைப் பெறத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பால்மா மற்றும் இதர பண்ணை உற்பத்திகளை இறக்குமதி செய்ய வருடாந்தம் பெருந்தொகை பணம் செலவிடப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த புதிய அமைச்சரவைப் பத்திரமொன்றில் தீர்வொன்று முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதன்போது சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடத் தலைவரும், தேசிய கால்நடை வள அபிவிருத்திச் சபையின் தலைவருமான கலாநிதி மஞ்சுல சுமித் மாகமகே உரையாற்றுகையில், விலங்கு உணவுகளுக்கான பற்றாக்குறை பண்ணை உற்பத்தித் துறையின் பிரதான பிரச்சனை என்றார்.
0 comments :
Post a Comment