Friday, June 12, 2020

விசர்பிடித்து விசம்வைத்து நாய்களைக் கொன்ற இராணுவ வீரர் கைது!

விசர் நாயொன்று மாடொன்றைக் கடித்ததனால் அந்த மாடு இறந்துள்ளது. அதற்காக வவுனியாவில் உள்ள மாமடுவ கிராமத்தில் இறைச்சியில் நஞ்சூட்டி 15 நாய்களுக்குக் கொடுத்துக் கொன்றதாக முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

நாய்களுக்கு இறைச்சியுடன் சேர்த்து ஏதோவொரு பொருளை வழங்கியதன் பின்னர் நாய்கள் இறந்ததாக, அப்பிரதேச மக்கள் மாமடு பொலிஸில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பின்னர் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், குறித்த இராணுவ அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கால்நடைகளை வளர்த்து வந்துள்ளார். அவரது மாட்டுக் கொட்டிலிலிருந்த தாய்ப்பசுவொன்றையும், கன்றொன்றையும் நாயொன்று கடித்து இறந்ததனால், ஆவேசப்பட்ட அவர், நாய்களுக்கு நஞ்சூட்டப்பட்ட இறைச்சியைக் கொடுத்து நாய்களைக் கொன்றுள்ளார் என பொலிஸாருக்குத் தகவல் கிடைத்ததையடுத்தே குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com