Saturday, May 9, 2020

ஸ்ரீ சபாரத்தினம் கொலை .. பத்மநாபா கொலை ... புலிகளின் அடுத்த குறி .... யாராக இருந்தது? கலாநிதி

ஸ்ரீ சபாரத்தினம் அவர்கள் கொஞ்சம் வசதியான நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராகும்.. அவரது ஆரம்ப அரசியல் ஈடுபாடு அன்றைய தமிழர் விடுதலை கூட்டணியின் இளைஞர் ஆதரவு தளத்தில் இருந்ததான் ஆரம்பமாகிற்று .

அரசியல் கட்சிகளின் ஜனநாயக பாதை இனி ஏற்புடையது அல்ல என்ற பொதுக்கருத்து எல்லோர் மனதிலும் அப்போது உருவாகி இருந்தது. ஈழ விடுதலையை நோக்கமாக கொண்டு பல சிறு சிறு அமைப்புக்கள் இயக்கங்கள் ஆங்கும் இங்குமாக தோன்றிகொண்டு இருதது.

அவற்றில் பலம் வாய்ந்த இயக்கங்களாக டெலோவும் ஈரோசும் பிளாட்டும் புலிகளும் உருவானார்கள். பின்பு ஈரோசில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்த பத்மநாப ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தை தொடங்கினார்.

கொள்கை அளவில் இந்த இயக்கங்கள் இடையே கொஞ்சம் தனித்துவமான வேறுபாடுகள் இருந்தன. அவற்றின் கொள்கைகள் பற்றிய ஆய்வுகளை கூறப்புகின் அதுவே ஒரு பெரிய நூல் ஆகிவிடும்.

டெலோ இந்திய நலனை சார்ந்துதான் ஈழம் அமைய முடியும் என்ற அடிப்படை கொள்கையை கொண்டிருந்தது. இந்தியாவை விரோதித்து கொண்டு ஈழத்தை அமைத்து விட முடியாது என்ற கருத்தை மிகத் தெளிவாக வெளிப்படையாக அறிவித்த ஒரே விடுதிலை இயக்கம் டெலோ மட்டும்தான்.

ஈ பி ஆர் எல் எப் இயக்கமும் டெலோவை போலவே இந்திய நலனை மீறி போராட்டத்தை தொடர முடியாது என்ற கொள்கையை ஓரளவு கொண்டிருந்தது. புளட் , புலி .. ஈரோஸ் போன்றவை வெளிப்படையாகவே இந்தியாவை நம்ப முடியாது என்று போராட்டம் தொடங்க முன்பே தெரிவித்து கொண்டவையாகும்.

தமிழக அரசியல் கட்சிகளும் பல தலைவர்களும் தங்களின் இந்திய மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை இந்த இயக்கங்கள் மீது இறக்கி வைத்தன.

இதில் சிக்காமல் இந்திய மத்திய அரசின் துணையும் வேண்டும் தமிழக மக்களின் ஆதரவும் வேண்டும் என்ற நிலையில் டெலோ இருந்தது.

எம்ஜியார் ஆதரவு ஒரு புறமும் நெடுமாறன் வைகோ மற்றும் பெரியார் இயக்கங்களின் ஆதரவும் தனக்கு போதும் என்று புலிகள் கருதினார்கள..

ஈழத்தில் விடுதலை போராட்டங்கள் பெரிதாக எழுச்சி அடையும் முன்பே ஈழதமிழர்களுக்காக தொடர் போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி ஈழத்துக்கான மிக பெரும் ஆதரவு தளத்தை கலைஞர் உருவாக்கி இருந்தார்.

இன்னும் சரியாக சொல்ல போனால் திராவிட முன்னேற்ற கழகம் உருவாக்கிய ஈழ ஆதரவு தளமனானது வெறும் தமிழக நிலப்பரப்பிற்குள் மட்டும் சுருங்கி இருக்கவில்லை. அகில இந்திய அளவில் ஈழத்துக்கு ஆதரவான மிகபெரும் எழுச்சியை உண்டாக்கி இருந்தது. உலக ஊடங்களிலும் தம்ழகத்தின் எழுச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆங்கில பிரெஞ்சு ஜெர்மன் போன்ற ஐரோப்பிய மொழி ஊடகங்களிலும் ஒரு அன்றாட செய்தியாகி இருந்தது.

ஈழ விடுதலை போராட்டத்திற்கு உலக அரங்கில் கிடைத்த அதீத வெளிச்சம், ஈழ விடுதைலையை ஒரு கவர்சிகரமான விடயமாக மாற்றி விட்டிருந்தது. அந்த கவர்சிகரமான தேரில் ஏறி இடம் பிடிக்க உலகெங்கும் பலர் போட்டி போட்டுக்கொண்டு ஏறி இடம் பிடித்தனர் .

ஈழ விடுதலை போராட்ட ஆதரவு தளத்தை உருவாக்கி வைத்திருந்தது திராவிட முன்னேற்ற கழகம். நெடுமாறன் போன்றோர் உடனே முண்டி அடித்து கொண்டு ஈழ விடுதலை போராட்ட கப்பலில் ஏறி குதித்தார்.
அவர் தான் சவாரி செய்ய தேர்ந்தெடுத்த குதிரைதான் புலிகள் இயக்கம்.

புலிகள் இயக்கத்திற்கு தமிழகம் ஒரு புத்தம் புது தளமாக இருக்கவில்லை. ஏற்கனவே அவர்களின் பிரதேச ரீதியான தொடர்பு தமிழகத்தில் ஓரளவு இருந்தது. ஏனைய இயக்கங்களுக்கு தமிழகம் முற்று முழுதாக ஒரு புதிய தளமாக இருந்தது. எனவே தமிழக தொடர்புகள் மூலமான வசதி வாய்ப்புக்கள் கொஞ்சம் அதிகமாகவே பிரபாகரனுக்கு கிடைத்திருந்தது. ஒரு புறம் நெடுமாறன் வைகோ போன்றவர்களின் நெருக்கமும் மறுபுறம் எம்ஜியாரோடு ஏற்பட்ட ஒரு கூட்டும் புலிகளின் மனதில் ஒரு தனிக்காட்டு ராசா மனநிலையயை உண்டாக்கி இருந்தது. .

எம்ஜியாரோடு புலிகளுக்கு ஏற்பட்ட தொடர்பு அவர்களுக்கு பெரிய உதவியாக அமைந்தது. புலிகளுக்கு எல்லா வசதிகளையும் அவர் செய்து தந்தார். எல்லை மீறியும் தந்தார். அந்த காலக்கட்டத்தில் விஜயவாடா துறைமுகத்தில் வந்து சேர்ந்த ஒரு கப்பலில் இருந்த காண்டேயினர் ஒன்றில் முழுவதும் பெரிய ஆயுத குவியலாக இருந்தது. அதில் புளட் இயக்கத்திற்கு வந்த 1400 ஏகே 47 துப்பாக்கிகளையும் 375 இயந்திர துப்பாக்கிளும் இருந்தன. அவற்றை கைப்பற்றிய எம்ஜியார் அபப்டியே அவற்றை புலிகளிடம் கொடுத்தார் .

ஈழ விடுதலை போராட்டத்தில் நடந்த முதல் மிக பெரிய ஆயுத கொள்ளை அதுவாகும். அதை நடத்தியவர் எம்ஜியார் . அது புலிகள் அமைப்பை பல மடங்கு பலம் மிக்க ஆயுத குழுவாக மாற்றி விட்டது. அந்த ஆயுத குவியலை தந்த எம்ஜியாருக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும் அல்லவா? கலைஞரோடு கைகோர்த்து கொண்ட ஸ்ரீ சபாரத்தினத்தையும் அவர் தலைமை விகித்த டெலோ இயக்க போராளிகளையும் கொன்று எம்ஜியாருக்கு அந்த நன்றியை செலுத்தினர் பிரபாகரன்.

அந்த கொடூர நாட்களில் ஸ்ரீ சபாரத்தினத்தினத்தின் கொலையை தடுக்க கலைஞர் தன்னாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். புலிகள் கலைஞரின் கோரிக்கையை செவி மடுக்கவில்லை. டெலோ அழிப்புக்கு பின்பு பிரபாகரனுக்கு விருந்து வைத்தார் எம்ஜியார். இதை வாசிப்போர்களுக்கு நம்புவது சிரமமாக இருக்கும் .. ஆனால் இதுதான் உண்மை.

கலைஞர் மீது எம்ஜியார் கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியும் . இயல்பிலேயே கொடூர சர்வாதிகார மனோ நிலையும் கொண்ட பிரபாகரனும் சேர்ந்து செய்த மிக பெரிய முதல் போர்குற்றம் அது .

அன்றே சர்வதேச மன்னிப்பு சபை போன்ற உலக அமைப்புக்களில் இந்த விடயம் எடுத்து சென்றிருந்தால் அன்றே பிரபாகரன் மட்டுமல்ல எம்ஜியாரும் கூட ஒரு கடுமையான போர் குற்றவாளியாகி இருப்பார்.
ஈழப்போராட்டத்தில் கலைஞரின் செல்வாக்கு இருக்க கூடாது என்பது எம்ஜீயாரின் நோக்கம். ஈழ போராட்டத்தில் எவரது ஈடுபாடும் இருக்க கூடாது என்பது பிரபாகரனின் பேராசை. இரண்டு சுயநல உணர்வுகளும் நன்றாக ஒத்து போனது!.

டெலோ ஈ பி ஆர் எல் எப் போன்ற அனைத்து இயக்கங்களினதும் அழிவுகளுக்கு பின்பாக இலங்கை ராணுவம் வேகமாக முன்னேறியது. இயக்கங்கள் எப்படி அழிந்ததுவோ அதை விட வேகமாக ராணுவ கட்டுப்பட்டு பரப்பளவு பெருகி கொண்டே வந்தது.

இறுதியில் புலிகள் அச்சுவேலி என்ற ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் முடக்கப் பட்டார்கள்.( அது முள்ளி வாய்க்காலை விட மிக மிக சிறிய நிலப்பரப்பு)

இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் ஈழ போராட்டம் முடிந்துவிடும் என்று இலங்கை அரசு அறிவித்தது. அப்போது அசுர பலத்தோடு பதவியில் இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தன அரசு இந்தியாவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சாதாரண ராஜதந்திர பேச்சு வார்த்தைகள் ஒன்றுமே ஜே ஆரிடம் எடுபட வில்லை. அன்று இலங்கை ராணுவம் முழு வடக்கு கிழக்கையும் தனது கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தால் தமிழர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்வி பல மட்டங்களிலும் ஒரு விவாத பொருளாக மாறி இருந்தது.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி இலங்கை விடயத்தில் தலையிட்டார். பிரபாகரனை காப்பாற்றினர்.

தனக்கு ஆபத்து என்றதும் குய்யோ முறையோ என்று முறையிடுவதும் பின்பு ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து கொல்வதும் தான் பிரபாகரனின் வரலாறு.

அவருக்கு நல்ல புத்தி சொல்ல வேண்டிய எம்ஜியார் நெடுமாறன் போன்றோர் அன்று அவருக்கு நெருக்கமாக இருந்தனர் . அவர்கள் மேலும் மேலும் பிரபாகரனின் சர்வாதிகார ஆசைக்கு தூபம் போட்டு அவரை மேலும் மேலும் முட்டாள் ஆக்கி கொண்டிருந்தனர் . தங்களின் அரசியல் இருப்பை உயர்த்தி கொள்ளவே அவரை பயன்படுத்தி கொண்டனர்.

இந்திய ராணுவம் நாடு திரும்பியதும் இந்திய ராணுவத்தையே புறமுதுகு கண்ட பெருவீரன் என்று நெடுமா வைகோ போன்றோர்ர் மட்டுமல்லாது பல பெரியார் இயக்கத்தினரும் போற்றி புகழ் பாடினார்கள்.

இந்த நிலையில் பிரபாகரன் தனது அடுத்த கட்ட சதிக்கு ஆயத்தமானார். சென்னையில் வைத்து பட்டப்பகலில் பத்மநாபா உட்பட பதினான்கு ஈ பி ஆர் எல் எப் தலைவர்கள் ( எம்பி யோகசங்கரி உட்பட) தொண்டர்களை புலிகள சுட்டு தள்ளினார்கள்..

எம்ஜியார் இல்லாத அதிமுக புலிகளுக்கு ஒரு எதிர்நிலையில் இருந்தது. ஜெயலலிதா ஒரு போதும் புலிகளை ஆதரித்ததில்லை. அவருக்கு புலிகளின் தன்மை நன்றாகவே புரிந்திருந்தது. எம்ஜியாரின் வாரிசல்லவா ?
பாம்பின் கால் பாம்பு அறியும்தானே? புலிகளை ஒரு போதும் திருப்தி படுத்தவே முடியாது என்பதையும் அவர் அறிந்தே இருந்தார்.!

இனி அதிமுக மூலம் எதுவும் தங்களுக்கு கிடைக்காது என்பதை புரிந்துகொண்டனர் புலிகள். ஆனாலும் வழமை போல தாங்களுக்கு வேண்டிய விடயங்களை அதிமுகவினருக்கு பணம் கொடுததே சாதித்து கொண்டு வந்தனர். அதிமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் புலிகளின் சகல சட்ட விரோத நடவடிக்கைகளும் பணப்பரிமாற்றம் மூலம் தங்கு தடையின்று நடந்த வண்ணமே இருந்தது. அதிமுகவை ஒவ்வொரு புலி ஆதரவாளரும் விரும்பும் காரணம் அதுதான்.

என்னதான் ஜெயலலிதா புலிகளுக்கு எதிராக பேசி அகதி முகாம்களில் இருந்த மக்களின் கல்வியில் மண்ணை அள்ளி போட்டாலும் புலிகள் எப்போது அதிமுகவையே ஆதரித்தனர் . காசு கொடுத்தால் காரியம் நடக்கும் அல்லவா?

புலிகளுக்கு தமிழகத்தில் தங்களின் மாபியா தளத்தை வலுவான முறையில் அமைக்கும் திட்டம் இருந்தது. அவர்களின் நீண்ட காலத்து கனவு திட்டங்களுக்கு அது தேவையாக இருந்தது. பத்மநாபா கொலையும் கூட அதன் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்புள்ளது.

கலைஞரை கொல்வதற்கு புலிகள் ரகசிய திட்டம் வைத்துள்ளார்கள் என்று மத்திய உளவுத்துறை கலைஞருக்கு அனுப்பிய செய்தியில் உண்மை இருக்க எல்லாவிதமான காரணமும் உள்ளது..

நான் முன்பொரு முறை குறிப்பிட்டது போல புலி சார்பு நிலையில் உள்ளவர்கள் ஒரு உளவியல் வலைப்பின்னலுக்குள் இருப்பவர்ககளாகும். புலித்தலைமையின் திட்டங்கள் கருத்துக்கள் போன்ற தெளிவான விபரங்கள் அவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை. ஆனால் தலைவருக்கு எவரை பிடிக்கும் எவரை பிடிக்காது என்பதை மட்டும் உள்வாங்கி இருப்பார்கள் .

பிடிக்காது என்றால் அதன் அர்த்தம் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் அவர்கள் புலிகளால் கொல்லப்படுவார்கள் என்பதாகும். அவர்களின் வேலை திட்டத்தின் முதல் அத்தியாயமே தங்களுக்காக உடல் பொருள் ஆவி எல்லாவற்றியும் புன்னகையோடு அர்பணிக்க தயக்கம் காட்டுவோர்கள் எல்லோரும் துரோகிகள் அல்லது எதிரிகள் என்று கருதப்படுவார்கள். அப்படி எதிரிகள் அல்லது துரோகிகள் என்று கருதப்படுவோர்களுக்கு என்ன நடக்கும் என்பதை புலி ஆதரவாளர்கள் அவர்கள் மீது காட்டும் வெறுப்பே காட்டி கொடுத்துவிடும் .

அப்படிப்பட்ட ஒரு வெறுப்பை கலைஞர் மீது அத்தனை புலி ஆதரவளர்களும் இன்று வரை தொடர்கிறார்கள். தங்கள் தலைமையின் குறி தவறி விட்டதே என்ற கவலை அவர்களுக்கு.

இந்த நிலையில் கலைஞரின் நிலைமை மிகவும் இக்கட்டான ஒன்றாகும். ஜனநாயக வழியில் இயங்கும் ஒரு மாநில கட்சியின் எல்லைகள் மிகவும் வரம்புக்கு உட்பட்டவை. புலிகளின் குறி தங்கள் மீது இருப்பது தெரிந்தும் அதை வெளிபடையாக கூறமுடியாத ஒரு நிலை அன்றிருந்தது. ஒரு புறம் அது இலங்கை அரசுக்கு மிகவும் சாதகமான பிரசார விடயமாகிவிடும்.

அதே சமயம் அந்த ஆபத்து தன்னை நோக்கி வருவது தெரிந்தும் தெரியாதது மாதிரி இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதற்கு பல காரணிகள் உண்டு. கலைஞர் மிகவும் ராஜதந்திரத்தோடு நடந்து கொண்டார் .. புலிகளை இந்த விடயத்தில் கலைஞர் புறமுதுகு கண்டார் .

தன்னையும் கொல்ல வந்தார்களே என்ற கோபம் கொஞ்சம் கூட இல்லாமல் மீண்டும் அவர்களை ஆதரித்தார். இறுதியில் அவரை காப்பாற்றவும் முயன்றார் .

அது வழக்கம் போல புலிகளின் தவறான கணிப்புக்களாலும் , தமிழகத்தில் இருந்த நெடுமாறன வைகோ , பெரியார் தோழர்கள் மற்றும் கம்யுனிஸ்டு தோழர்கள் போன்றோரின் கபடம் நிறைந்த ஆலோசனைகளை செவி மடுத்ததாலும் இறுதியாக வந்த சந்தர்ப்பத்தையும் உதறி தள்ளினார்கள்.

அந்த இறுதி வாய்ப்பு கலைஞர் மெரீனாவில் மேற்கொண்ட உண்ணா விரதத்தினால் கிடைத்ததூ. கலைஞரின் வயது உடல் நிலை போன்ற விடயங்களை நன்கு அறிந்த அன்னை சோனியா காந்தியவர்கள் அவசரம் அவசரமாக திரு ப .சிதம்பரம் மூலம் ஒரு முயற்சியை மேற்கொண்டார். தற்காலிக போர் நிறுத்தத்தையும் பிரபாகரன் உட்பட்ட தலைவர்களையும் ஐ நா மேற்பார்வையில் சரணடையும் ஏற்பாடு உறுதியானது.

இறுதி நேரத்தில் அது தமிழகத்தில் இருந்த கம்யுனிஸ்டு மகேந்திரனிடம் புலிகளின் நடேசன் சொன்னார் . அதை அவர் வைகோ நெடுமா போன்றவர்களிடம் லீக் செய்தார். சிதம்பரம் மிகவும் ரகசியமாக வைத்திருக்குமாறு கூறிய இந்த விபரங்களை புலிகள் விபரம் தெரியாமல் இவர்களிடம் கூறியதுதான் அவர்களுக்கு நேர்ந்த விபத்து என்று கூறவேண்டி இருக்கிறது.

இவர்கள் அவர்களுக்கு என்ன கூறினார்களோ தெரியாது . பிரபாகரன் அதை ஏற்று கொள்ளவில்லை என்று அறிவித்தனர். அத்தோடு அது முடிவை நோக்கி போனது வேகமாக. அமெரிக்கா வரவில்லை.. ஐ நா வரவில்லை நோர்வே வரவில்லை எந்த நாடும் வரவில்லை .

இறுதியில் சரண் அடையும் நிலை வந்தது . நடேசன் சரண் அடைய போவதாக இறுதியாக கம்யுனிஸ்ட் தலைவர் தோழர் பாண்டியனிடம் கூறினார். அதற்கு பாண்டியன் சரண்டர் என்ற வார்த்தையை உலக நாடுகளிடம் கூறாதீர்கள் . ஆயுதங்களை மௌனிக்கிரோம் என்று கூறுங்கள் என்றார்.

அதற்கு நடேசன் அப்படியாயின் அதை நீங்களே எழுதி அனுப்புங்கள் அதை நாங்கள் உலக நாடுகளுக்கும் ஊடகங்களுக்கும் அப்படியே அனுப்பி விட்டு வெள்ளை கொடியோடு செல்கிறோம் என்றார். இதுதான் அந்த இறுதி நிமிடங்கள்.

சரண் அடைந்தோரை கொன்றால் இலங்கை அரசு உலக நாடுகளின் பொருளாதார தடை போர்குற்றம் போன்ற பெரிய சிக்கல்களில் மாட்டு பட்டிருக்கும். எனவே ஒருபோதும் அந்த தவறை செய்திருக்க மாட்டார்கள்.
ஆனால் புலிகள்தான் எந்த காலத்திலும் சரண் அடையவில்லையே? இன்று காலை ஆயுதங்களை மௌனித்தால் நாளையே அவற்றை மீண்டும் இசைக்க தொடங்கி விடலாமே? மௌனித்தல் எனபது வேறு . சரண் அடைதல் என்பது வேறு. இது தெரியாத புலிகள் இது தெரியாத கம்யுனிஸ்டுகள்.

சிதம்பரம் மூலம் கிடைத்த இறுதி வாய்ப்பை குழப்பியதோடு நெடுமா வைகோ போன்றோர் ஒதுங்கி விட்டார்கள். அவர்கள் அப்போது ஈழத்தாயின் தேர்தல் வெற்றிக்காக உழைத்து கொண்டிருந்தார்கள்
ஈழ மக்கள் முள்ளி வாய்க்காலுக்கு போனார்கள் !

1 comments :

darkdevilarun February 28, 2021 at 2:38 AM  

உண்மை வரலாறு...👆

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com