Thursday, May 14, 2020

நந்திக்கடல் நாயாறு மற்றும் தொண்டமனாறு ஆகிய களப்புக்களை புனரமைக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு ஆலோசனை

மேற்குறித்த இரு களப்புக்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் கொவிட் 19 காரணமாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் புனரமைப்பு நடவடிக்கைகளில் தொய்வினை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அக்களப்புக்களை புனரமைக்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகள் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நாரா எனப்படும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி, அகழப்படுகின்ற சேற்று மணலை கொட்டுகின்ற இடத்தினை தெரிவு செய்து அங்கு கொட்டுவதற்கான சுற்றுச் சூழல் திணைக்களத்தின் அனுமதி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம், கரையோர பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் தலைமைகளின் அக்கறையீனம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் உள்ள நாயாறு மற்றும் நந்திக்கடல் நீர் நிலைகளில் சுனாமி அனர்த்தத்தினால் கரையொதுக்கப்பட்ட பெருமளவு ஆழ்கடல் பொருட்களும் மணல் படுக்கைகளும் தேங்கி கிடக்கின்றன.

இதன்காரணமாக குறித்த களப்பு பிரதேசத்தில் நீர்வாழ் உயினங்களின் உற்பத்தி குறைவடைந்து வருவதாக குறித்த நீர்நிலைகளை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்ற பிரதேச மக்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருப்பட்ட நிலையில் குறித்த களப்பு நீர் நிலைகளை புனரமைப்பு செய்வதில் அமைச்சர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்.
குறித்த நீர்நிலைகள் இரண்டும் பூரணமாக புனரமைக்கப்படுகின்ற நிலையில் சுமார் 3000 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை தொண்டமானாறு களப்பினுள் பழைய பாலம் ஒன்று விழுந்து காண்படுவதனால் அதனை அகற்றுவதற்கு தேவையான 20 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com