20 க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டத்தை மீறிய 33 பேருக்கெதிராக வழக்கு
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்ராஜ் பணிப்புரைக்கமைய 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்ட 120 க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டத்தை மீறிய 33 வியாபார நிலையங்களுக்கெதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
2020ம் ஆண்டு ஏப்ரல் மாத காலப்பகுதியில், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் சட்டத்தை மீறிய வியாபார நிலையங்களுக்கெதிராக மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் மாவட்ட அதிகாரி எம்.பி.எஸ். கமல்ராஜ் ரெவல் தெரிவித்தார்.
இதில், காலாவதியான பொருள்களை விற்பனை செய்தல் மற்றும் காட்சிப்படுத்தல், நுகர்வோரை ஏமாற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுதல், அத்தியாவசியப் பொருள்களின் கட்டுப்பாட்டு விலையினை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல், மின்சார மற்றும் இலத்திரனியல் உபகரணங்களுக்கு கட்டுறுத்து காலம் வழங்காமை, தரச்சான்று இல்லாத பொருள்களை விற்றல், போன்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தினை மீறியவர்கள் மீதே சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள அதிகாரிகள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் உள்ளனர் என்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் மாவட்ட உத்தியோகத்தர் தெரிவித்தார்.
.
0 comments :
Post a Comment