அரச வளங்களை பங்கிடுவதில் மட்டக்களப்புக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி! றிசார்ட்- ததேகூ கூட்டுச்சதி!
அரச வளங்கள் பங்கிடப்படுகையில் இனக்குழுமங்கள், பிரதேசங்களிடையே அவை சமனாக பங்கிடப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவானது. அந்த வரிசையில் நுகர்வோருக்கு நேரடியாக அரச சலுகைகள் கிடைக்கப்பெறுகின்ற இரு நிறுவனங்களாக ஒசுசல மற்றும் சதொச என்பன காணப்படுகின்றது.
இவ்விரு நிறுவனங்களிலும் அரச நிர்ணய நிலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதுடன் அது சாதாரண விற்பனை நிலைய விலைகளிலும் குறைவானது என்பது யாவரும் அறிந்த விடயமாகும். ஆனால் இவ்விரு நிறுவனங்களினதும் ஒரு கிளைகூட இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுவப்படவில்லை என்பது அம்மக்களுக்கு அரசினால் இழைக்கப்பட்ட துரோகமாகின்றது.
கொரோணா வின் பாதிப்பினால் சகல விற்பனை நிலையங்களும் மூடப்பட்டு ஒசுசல மற்றும் சதொச நிறுவனங்களுடாக அரச நிர்ணய விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படும்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் குறித்த நிறுவனங்களின் கிளைகள் இல்லாத நிலையில், அரசவிலைச்சலுகையை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியாத மாற்றான் தாய் பிள்ளை நிலையில் மட்டக்களப்பு மக்கள் காணப்படுகின்றனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 3 பாராளுமன்ற உறுப்பினர்களால் ஒரு கிளையை கூட கொண்டுவரமுடியாது போயுள்ளது என்பது வெட்கப்படவேண்டியதாகும். சதொச நிறுவனம் றிசார்ட் பதியுதீனின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன் மட்டக்களப்பின் மொத்த வியாபாரம் முஸ்லிம் வர்த்தகர்களின் கைகளில் சிக்கியுள்ளது. இந்நிலையில் சதொசவின் கிளைகள் திறக்கப்படும்போது முஸ்லிம் வர்த்தகர்களின் கொள்ளைலாபத்திற்கு அது சவாலாக அமையும் என்பதால் சதோச மற்றும் ஓசுசல கிளைகள் திறக்கப்படவில்லை. மட்டக்களப்பின் மருந்துப்பொருட்களின் மொத்தவியாபாரத்தை ரிப்டொப் என்ற முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனம் தனது கையில் வைத்துள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இதேநேரம் சதொச கிளையொன்றை மட்டக்களப்பில் திறந்துவைப்பதற்கு முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்காக தெரிவு செய்யப்பட்ட கட்டிட உரிமையாளரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் கொமிசன் கேட்டதாவும் கொமிசன் பணத்தில் ஏற்பட்ட உடன்படாமை காரணமாக சதோச நிறுவும் பணி கைவிடப்பட்டதாக அறியக்கிடைக்கின்றது.
0 comments :
Post a Comment