Thursday, April 2, 2020

கொரோணா பரவவேண்டுமென்று கோருகின்றாரா சுமந்திரன்! சீறுகின்றார் மறவன்புலவு சச்சிதானந்தன்

நாடாளுமன்ற கூட்டத்தொடரை மீண்டும் தொடங்குமாறு மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேட்டுள்ளார். குடிமக்களின் இறைமையை நாடாளுமன்றம் எடுத்துச் செல்கின்றது. இறைமைக்கு ஆட்சி வடிவம் கொடுக்கிறது. தீநுண்மித் தொற்றுநோய் இரட்டித்து இரட்டித்த கணிதப் பெருக்கத்தில் பாய்ந்து பரவும் என்ற அச்சம் சூழ்ந்த வேளை.

இயல்பு நிலையில் உலகில் எந்த நாடுமே இல்லை. குடிமக்களின் இறைமைக்கு ஆட்சி வடிவம் கொடுக்க நாடாளுமன்றம் கூடலாமா?

தென்கொரியாவின் கடவுளர் திருக்கூட்டம்
இந்தியா தில்லியின் நிசாமுதீன் எழுச்சிக் கூட்டம்.
இலங்கை யாழ்ப்பாணம் அரியாலையில் பிலடெல்பியா தேவாலயத் திருக்கூட்டம்.

இக்கூட்டங்களே தீநுண்மித் தொற்று நோயின் கருவறைகள் ஆயின. தொடர்ந்து கூட்டங்கள் கூட்டுவதே தவறு என்பர் மருத்துவர். தொற்றுநோய்க் கருவுக்கு அவை தாயகமாகும் என்பர்.

செயவர்த்தனபுரத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுவதற்கும் அரியாலையில் பிலடெல்பியா தேவாலயக் கூட்டத்தைக் கூட்டுவதற்கும் வேறுபாடில்லை.

இவ்வாறான கூட்டங்களை நடத்தியோரும் நடத்துமாறு கோருவோரும் தம்மைத் தாம் மத மாற்றிகள் என்பதை ஒப்பியவர்கள்.

மரபு சார்ந்த வழமை சார்ந்த அருள் பெருக்கும் கூட்டங்கள் மதமாற்றக் கூடாரங்கள் அல்ல.

மதம் மாற்றியாக,
மதம் மாற்றுவதே நோக்கமாகக் கொண்ட
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் துணைத் தலைவரான,
மதம் மாற்றுவதையே தொழிலாகக் கொண்டு மாதம் இரண்டு இலட்சம் ரூபாய் பிரித்தானியக் கிருத்தவ அமைப்பிலிருந்து சம்பளமாகப் பெறுகின்ற சாவித்திரியின் கணவரான
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோருவது இலங்கை முழுவதும் தீநுண்மித் தொற்று நோயைப் பரப்பும் நோக்கத்துடனா? எனக் கேட்க விரும்புகிறேன்.

புறத்தோற்றம் ஒன்று. அக நோக்கம் வேறு. இவ்வாறானோர் ஆட்டுத் தோல் போர்த்த ஓநாய் எனத் தூயரான ஏசு பெருமானே எடுத்துக்கூறிய மலைப்பிரசங்க வரிகளைத் (மத்தேயு 7.15) தூயரான இயேசு பிரான் பெயரால் மதமாற்றத்தில் ஈடுபட்டிருக்கும் சுமந்திரனுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன்.

புறன் உடையர்
புனை துகிலர்
தம் நெறியலாதன புறம் கூறுபவர்
பாண்டியனுக்கு வெப்பு நோயைத் தந்தவர்
என்றெல்லாம் திருஞானசம்பந்தப் பெருமான் அடையாளம் காட்டினார்.
எத்தர் என்றும் ஈனர் என்றும் கூறினார்.

ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று தூய இயேசுபிரான் கூறினார்.

இன்றும் இத்தகையோரே நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி இலங்கை முழுவதும் தீ நுண்மித் தொற்றைப் பரப்புமாறு கூறுவர்.

இயல்பற்ற நாட்டுச் சூழலில்
நாடாளுமன்றத்தைக் கூட்டாமலே
குடிமக்களின் இறைமைக்கு ஆட்சி வடிவம் கொடுக்கும்
வரையறைகள் இன்றைய அரசியலமைப்பில்
தாராளமாக உள்ளன.

தேர்தல் ஆணையம்
குடியரசுத் தலைவர்
நாடாளுமன்ற அவைத் தலைவர்
உச்சநீதிமன்றம்
யாவரும் இணைந்தே
இலங்கைக் குடிமக்களின் இறைமையை
ஆட்சியாக்கும் சட்டவலிமை கொண்டவர்.

சட்ட நுணுக்கங்களை எடுத்துக் கூறக்கூடிய வல்லுனர்கள் ஏராளம் ஏராளம். மதமாற்றம் அவர்களின் நோக்கம் அல்ல.

தீநுண்மித் தொற்றை இலங்கை முழுவதும் பரப்பும் வழிவகைகளை அவர்கள் கூற மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஆட்டுத்தோல் போர்த்த ஓநாய்கள் அல்லர்.

உலக நாடுகள் பலவற்றின் நாடாளுமன்றங்கள், மாநில அவைகள், மாகாண அவைகள் உள்ளூராட்சி . அமைப்புகள் முடங்கி உள. ஐநா மாநாடுகளைப் பின் தள்ளினர். விம்பிள்டன், ஒலிம்பிக் போட்டிகள் பின் தள்ளின. இதை அறிந்தவர் சுமந்திரன். தெரிந்தும் இலங்கை நாடாளும்னறத்தைக் கூட்டக் கேட்கிறார். இவரரின் கோரிக்கை மத்தேயுவின் 17.5 வரிகளை நினைவூட்டுகிறது.

செய்தி அறிக்கை
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com