ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் செயற்பாடு இன்றுடன் நிறைவு பெறவுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார மறு சீரமைப்பு, வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.
இதுவரை, 5000 ரூபா கொடுப்பனவை வழங்காத மாவட்டங்களில் தொடர்ந்தும் அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5,000 ரூபா கிடைக்கப்பெறாதவர்களின் மேன்முறையீடுகளில் 95 வீதமானவை பரிசீலிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலணி கூறியுள்ளது.
சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்கள் அடங்கலாக 74 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக பொருளாதார மறு சீரமைப்பு, வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments :
Post a Comment