பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகியுள்ளதினால் டெங்கு நோய் பரவக்கூடும் என்று எச்சரிக்கை
பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகியுள்ளதினால் டெங்கு நோய் பரவக்கூடும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதனால் நுளம்புகள் பெருகும் இடங்கள், தூய்மையான நீர் இருக்கும் பகுதிகள், மழைநீர் வழிந்தோடும் குழாய்கள் மற்றும் வீட்டை சூழவுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பதில் பொதுமக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் கூறினார்.
ஊரடங்கு சட்டம் காரணமாக, சூழல் மற்றும் வீட்டை தூய்மையாக வைத்திருப்பதற்கான சந்தர்ப்பம் பொது மக்களுக்கு கிட்டியுள்ளது.
இதுதொடர்பில் பொது மக்கள் கூடுதலாக கவனம் செலுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
டெங்கு நுளம்புகள் பரவும் வளாகங்களை சுத்தப்படுத்தி, டெங்கு நோய் அனர்த்தத்தை நீக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர பொது மக்களிடம கேட்டுக்கொண்டுள்ளார்.
வறட்சியான காலநிலை காரணமாக இந்த ஆண்டின் முதல் காலாண்டில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டதாகவும் அவர மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment