தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைக்காதோர் மீது நடத்துவீர் துப்பாக்கி பிரயோகம்! பிலிபைன் ஜனாதிபதி
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்த அனைவரும் தனிமைப்படுத்தப்படும் முயற்சிக்கு ஒத்துழைக்குமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ டியூட்டர் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் அரச தொலைக்காட்சியில் பேசிய அவர், இந்த தனிமைப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்காத மற்றும் அதற்கு இடையூறு செய்கின்றவர்களை சுட்டுக் கொல்வதற்கு பாதுகாப்புத்துறைக்கு அதிகாரம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
ஆகவே சட்டத்தைப் பாதுகாக்கின்ற பொலிஸார், படையினர் உட்பட பாதுகாப்புத்துறைக்கு, தொற்று பரவாமல் இருப்பதற்காக தனிமைப்படுத்தலை மேற்கொள்ளாத, அதற்கு இடையூறு செய்பவர்கள் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் இந்த அதிரடி உத்தரவானது அந்நாட்டு மக்களுக்கு பாரிய அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக சர்வதேவ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்புத்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதலையும் ஏற்படுத்தும் சந்தர்ப்பமாக இது அமையலாம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
0 comments :
Post a Comment