Wednesday, April 1, 2020

அடுத்துவரும் வாரங்களில் கொரானோ தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் - அபாய எச்சரிக்கை!

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா (கொவிட் 19) வைரசுத் தொற்றாளர்களை இனங்காண்பதற்காக சந்தேகத்திற்கிடமான அனைவரையும் ஆய்வுகூடப் பரிசோதனைக்குட்படுத்துவதன் மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என விசேட வைத்திய நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

இலங்கை மருத்துவச் சபையின் முன்னாள் தலைவரான ருவைஸ் ஹனீபா உள்ளிட்ட கொழும்புப் பல்கலைக்கழக விசேட வைத்தியர்கள் இதுதொடர்பில் குறிப்பிடும்போது, கொரானோ வைரசுத் தாக்குதலுக்குள்ளானவர்கள் எனச் சந்தேகிப்படுகின்றவர்கள், அவர்களுடன் உறவாடியவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து அவர்கள் அனைவரையும் கட்டாயம் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.

இலங்கையிலுள்ள கொரானோ தொற்றாளர்களை வௌிநாட்டு நோயாளர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது, எதிர்வரும் வாரங்களில் இலங்கையில் கொரானோ வைரசுத் தாக்குதலுக்குப் பலர் ஆளாக நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

சிங்கள - தமிழ் புத்தாண்டுக் காலப்பகுதியில் யாருமே நட்பு பாராட்டுவதற்கு அயலவர்களின் வீடுகளுக்குச் செல்லக்கூடாது. அவ்வாறு அயலவர்களின் வீடுகளுக்குச் சென்றால் நிலைமை படுமோசமாகும் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com