ஊரடங்கு சட்டத்தை மீறிய 343 பேர் கைது
ஊரடங்கு சட்டத்தை மீறிய 343 பேர் நேற்றுக் காலை 6 மணி தொடக்கம் 12 மணி வரையான காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் 102 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் நேற்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 30 ஆயிரத்து 631 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் 7 ஆயிரத்து 892 வாகனங்களுக்கும் கைபப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் புத்தளம் ஆகிய 6 மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய 19 மாவட்டங்களிலும் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment