Wednesday, April 1, 2020

நேற்றைய நாளை விட (31) இன்று கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

தொற்று நோய் விஞ்ஞானப் பகுதி நேற்றைய தினத்திற்கு ஈடாக இன்று காலை 10.00 மணியளவில் வௌியிட்ட அறிக்கைக்கேற்ப நோய்த் தொற்றாளர்கள் ஐந்து பேருடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது, மேலதிகமாக 16 பேர் கொரானோ தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதாவது புதிதாக 21 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இந்நிலை மிகவும் எச்சரிக்கைக்குரியதாகும் என தொற்று நோய் கட்டுப்பாட்டு விசேட வைத்தியர்களின் கருத்தாகும். அவர்களின் ஆய்வுக்கேற்ப தற்போது கொரானோ தொற்றுடையவர்கள் என அதிகமாக இனங்காணக்கூடியவர்கள்உள்ள மாவட்டமாக கொழும்பு காணப்படுகின்றது. அங்கு 32 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 25 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 24 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 11 பேரும் கண்டி மாவட்டத்தில் 4 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 3 பேரும், மாத்தறை, பதுள்ளை, காலி, கேகாலை, மட்டக்களப்பு, குருணாகல், யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஒவ்வொருவரும் தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

சர்வதேச ரீதியாகப் பார்க்கும்போது நேற்றைய தினம் (31) வைரசுத் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 57610 ஆக இருந்தது. நேற்று முன் தினத்துடன் ஒப்பிடும்போது 801 ​பேர் அதில் குறைவடைந்துள்ளனர். நேற்றைய தினம் அமெரிக்காவில் 17987 பேர் வைரசுத் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தனர். அன்றைய எண்ணிக்கையானது அதற்கு முன்தினத்துடன் ஒப்பிடுகையில் 1345 பேர் குறைந்துள்ளனர். நேற்று அமெரிக்காவில் 2619 பேர் நோய் தொற்றுக்குள்ளானவர்களாகப் பதிவாகியிருந்தனர். அதனை அதற்கு முன் தினத்துடன் ஒப்பிடும்போது 186 பேர் அதிகரித்துள்ளனர். COVID-19 ஆட்கொல்லி நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இனங்காணப்பட்டுள்ள இத்தாலியில் நேற்று 4050 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு நேற்று முன் தினத்துடன் அதனை ஒப்பிடும்போது 1167 பேர் குறைந்துள்ளனர்.

இந்த ஆட்கொல்லி வைரசிலிருந்து தப்ப வேண்டுமாயின் அரசாங்கம் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளை மக்கள் முற்று முழுதாகக் கவனத்திற் கொள்ள வேண்டும். மக்களில் 70%-80% பேர் ஆய்வுகூடப் பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்பது சுகாதாரப் பிரிவினரின் விருப்பாகும்.

உலக சுகாதார அமைப்பு மார்ச் 30 ஆம் திகதி வௌியிட்ட அறிக்கையின்படி உலக நாடுகள் 201 இல் கொவிட் - 19 வைரசுத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 750890 எனக்குறிப்பிட்டுள்ளதுடன், இந்த வைரசு காரணமாக 36405 பேர் இறந்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com