ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில் பி.ப. 2 மணியிலிருந்து மறு அறிவித்தல் வரை ஊரடங்கு!
கொவிட் - 19 தொற்றுதல் தொடர்பில் எச்சரிக்கைக்குரிய பிரதேசங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களிலும் தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டமானது இன்று பி.ப. 2 மணியிலிருந்து மீண்டும் பிறப்பிக்கப்பட்டது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் போன்ற எச்சரிக்கைக்குரிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் இன்று அதிகாலை 6 மணிக்குத் தற்காலிகமாகத் தளர்த்தப்பட்ட ஊரங்குச் சட்டமானது, இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டது. இது மீண்டும் எப்போது தளர்த்தப்படும் என்று அரசாங்கம் பின்னர் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசுத் தொற்றுவதைத் தடுப்பதற்காக, அரசாங்கம் சென்ற 20 ஆம் திகதியிலிருந்து ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆவன செய்தது.

0 comments :
Post a Comment