Sunday, March 1, 2020

TNA மீது காமுகன் கணேஷலிங்கமும் கல்லெறி! ஜெனிவா விஜயம் களியாட்டத்திற்காகவாம்! கூறுகிறார் த.தே.கூ பிரபலம் சயந்தன்.

பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா! யாரும் இருக்குமிடத்திலிருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே, நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும்கூட மிதிக்கும்.. இது சினிமா பாடல்வரிகள். ஆனால் இந்த நிலைதான் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலை. தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்து தமது சுயநலத்திற்காக மக்களை காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுவதால் கள்வர் , காடையர் , காமுகர்கள் கூட கல்லெறியலாம் என்றாகிவிட்டது.

அந்த அடிப்படையில், கடந்த 2005ம் ஆண்டளவில் தனது வீட்டில் வேலைக்காரியாக 13 வயது சிறுமியை வைத்திருந்து அவரது கல்விகற்கும் உரிமையை மறுத்தது மாத்திரமல்லாமல், 40 தடவைகளுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்ததாக நீதிமன்றில் குற்றச்சாட்டப்பட்டிருந்த காமுகன் கணேஷலிங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

அரசியல் தலைமைகள் பொறுப்பாண்மையுடன் செயற்பட்டால் இந்தச் சமூகம் ஒரு பொறுப்புணர்வுள்ள சமூகமாக செயற்படும், ஒரு பொறுப்புள்ள சமூகமாக மாற்றம் பெறும் என்று கூறும் காமுகன் கணேஷலிங்கம், தான் 13 வயதுச்சிறுமியை பாடசாலை செல்லவிடாது தனது வீட்டில் வைத்து வேலைவாங்கியதுடன் , 40 தடவைகளுக்கு மேல் வேலையும் கொடுத்தது (பாலியல் வன்புனர்வு ) பொறுப்புணர்வுடனா என்ற கேள்வியை கேட்கின்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புணர்வுடன் செயற்படவில்லை என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது , ஆனால் அந்த சமூகப்பொறுப்புணர்வு பற்றி பேசுவதற்கு சண்முகலிங்கத்திற்கு என்ன அருகதை இருக்கின்றது என்பதே கேள்வி.

ஜனநாயகத்தால் யாவற்றையும் அடையமுடியும் என்று தெரிவிக்கும் கணேஷலிங்கம் ஜனாயகத்தால் மேற்குலகம் பலவற்றை அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றார். ஆனால் தன்னால் வன்புனரப்பட்ட சிறுமிக்கு நீதிமன்றில் நீதிகிடைக்காமல் செய்வதற்கு ஜனநாயக விரோதிகளை பயன்படுத்திகொண்ட வரலாறு இங்கு குறிப்பிடப்படவேண்டியதாகும். ஜனாநாயக விரோதிகளின் ஆதரவாளராக தன்னை காட்டிக்கொண்டு நின்ற கணேஷலிங்கம், யாழ் நீதிமன்றில் வன்புனர்வுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது, சூட்சுமமாக புலிகளை கொண்டு சிறுமியை வன்னிக்கு அழைத்து அங்கே முடக்க வைத்த ஜனநாயகத்தினூடாக தான் அடையவேண்டியதை அடைந்து இன்று மக்கள் முன் நிர்வாணமாக நிற்கின்றார்.

30 வருடம் அரசியல் விஞ்ஞானத்தை படித்து வைத்துள்ளதாக தற்புகழ்சியடித்த காமுகன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பினை வெளிப்படுத்தும்பொருட்டு தங்கள் பதவிகளை துறந்துவிடவேண்டும் என்றும், அந்த இடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவுரை கூறினார். ஒரு அரசியல் கட்சி பொதுவான தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை முன்வைத்து தெரிவான பின்னர், கொள்கை ரீதியாக பாராளுமன்றை பகிஷ்கரித்து பதவிகளை ராஜனாமா செய்தபின்னர், அதே கட்சியை சேர்ந்த நபர்கள் புதிதாக பதவியை பெற்றுக்கொள்ளும்போது அக்கட்சியின் கொள்கை என்னவாகின்றது? ஒரு விடயத்திற்காக கட்சியை சேர்ந்தவர்கள் பகிஷ்கரித்து ராஜனாமா செய்கின்றபோது , அதே கட்சியை சேர்ந்தவர்கள் அப்பதவிகளை பாரமெடுத்தால், அக்கட்சியிடம் நிலையான கொள்கை இல்லை என்றும் கட்சியில் உள்ளவர்கள் ஒரே கொள்கையின் கீழ் இணைந்திருக்கவில்லை என்றும் அர்த்தப்படுத்தப்படாதா? இவ்வாறான மண்டை பிசகியவர்களிடம் கல்விகற்கும் சமூகம் எவ்வாறு நிதானமாகச் செயற்படமுடியும் என்ற சந்தேகமும் இங்கு எழுகின்றது.

மேலும் சிவிகே சிவஞானம் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரை நேரடியாக சுட்டிக்காட்டி அவர்களுக்கு வயது வந்துவிட்டதால் அரசியலிலிருந்து ஒதுங்கி இளையோருக்கு இடம்கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார் காமுகன் கணேஷலிங்கம். கோரிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான், ஆனால் யார் அந்த இளையோர் என்ற கேள்வியையும் இங்கு கேட்கவேண்டும். இவர் தனது பொங்குதமிழ் தம்பிகளான குதிரை கஜேந்திரன் கோஷ்டிக்கு இடம்கொடுக்கச்சொல்கின்றாரா?

குதிரைத் தம்பிகளுக்கு வாக்குச் சேர்ப்பதற்காக பேசி அமர்த்த கையுடன் ஒலிவாங்கியை பெற்றுக்கொண்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சயந்தன் இன்று ஜெனிவாவில் இடம்பெறுவது ஒரு களியாட்ட நிகழ்வு என்று கூறினார். அதாவது கஜேந்திரர்கள் அங்கு களியாட்டத்தில் ஈடுபடுகின்றார்கள் என்பது அவரது மறைமுக கருத்தாக அமைந்துள்ளது.

பீமன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com