Sunday, March 29, 2020

கொரோனாவிற்காக இராஜகிரி -ஒபேசேக்கரபுர முடக்கப்பட்டது!

மதகுரு ஒருவருடன் யாத்திரை ஒன்றிற்காக சுற்றுலாப்பயணம் மேற்கொண்டிருந்த சிறுவர்கள் இருவரும் பெரியோர்கள் நால்வருக்கும் ஆட்கொல்லி நோயான கொரோனாவின் அறிகுறிகள் சந்தேகத்திற்கிடமாக இருந்ததனால் ஶ்ரீஜயவர்த்தனபுரக் கோட்டை ஒபேசேக்கரபுர - அருணோதய மாவத்தை முடக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்த்தன புரக்கோட்டை மாநகர சபையின் பிரதம சுகாதார அதிகாரி மனோஜ் ரொட்ரிகோ குறிப்பிட்டார்.

குறித்ததொரு மதகுரு ஒருவரின் தலைமையின் கீழ், சென்ற 15 ஆம் திகதி சூரியவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற மதஅநுட்டான நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக இரண்டு பேருந்துகளில் மக்கள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர். குறித்த பயணத்தில் மேற்கொண்டோரில் கலந்துகொண்டோரில் கொரோனா தொற்றுக்குள்ளானோரும் சென்றிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com