Monday, March 9, 2020

மொட்டிடமிருந்துவந்த தொலைபேசியழைப்பையடுத்து பத்திபதறி கொழும்பு நோக்கி ஓடும் கருணா!

வேட்பாளர் தெரிவு மற்றும் தேர்தல்கூட்டுக்கள் தொடர்பான இறுதி முடிவுகளுக்கான இறுதிகட்டத்தை சகல தரப்பினரும் அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று பகல் பொதுஜன பெரமுனவிடமிருந்து கருணாவிற்கு வந்த அவசர அழைப்பை அடுத்து அவர் கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

இச்சந்திப்பானது கிழக்கின் தேர்தல்களம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதை தீர்மானிக்கப்போகின்றது. கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது உத்தேச வேட்பாளர்கள் யார் என அறிவித்துள்ள நிலையில் கிழக்கின் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் மாற்று தேர்வு (தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான ) க்கான கூட்டு சாத்தியமற்றதாகிவிட்டதாக அறியமுடிகின்றது. இந்நிலையில் கருணாவின் அவசர கொழும்பு விஜயம் சில சந்தர்ப்பங்களில் அனைவரையும் பிடித்து ஒரு கூட்டில் கட்டிப்போடுவதற்கான இறுதி முயற்சியாக அது அமையப்போகின்றது.

பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் , கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி , வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கட்சியினர் ஆகியோரை இணைத்துக்கட்டிப்போடுவதற்கு பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஆனாலும் அங்கு முயற்களிடம்பெற்றது என்று கூறுவதைவிட தாங்கள் ஒன்றுபடுவதற்கு முயற்சி செய்தோம் என மக்களுக்கு கூறுவதற்கான பாசாங்கு இடம்பெற்றது என்பது இலங்கைநெட் ன் கணிப்பீடாகும். காரணம் கூட்டு என்பதற்கு பிரதான முதலீடாக விட்டுக்கொடுப்பு இருக்கவேண்டும். ஆனால் இக்கட்சிகளில் எவரும் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இல்லை. எங்களது கட்சி, எங்களது தலைவர், எங்களது சின்னம், எங்களது வாக்குவங்கி, எங்களுக்கான விருப்புவாக்கு ஒட்டுமொத்தத்தில் „எங்களது' எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடம்கொடுக்கவில்லை.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது கட்சி சின்னத்திலேயே போட்டியிடவேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். அதற்கு சகலதரப்புக்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் கருணா மறுப்பு தெரிவித்த தரப்புக்களுடன் கூட்டு தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடாத்திவந்த அதே நேரத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டிருந்தார். அது தொடர்பாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் வெளிப்பட்ட சந்தேகங்கள் மற்றும் ஆசனப்பங்கீடு காரணமாக மாற்று தேர்வுக்கு சென்றுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. அதன் பிரகாரம் நாளை கொழுப்பிலிடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையினூடாக கொழும்பு மத்தியஸ்தத்தில் கூட்டு சாத்தியப்படாதவிடத்து, தமிழர் மா சபையின் கப்பல் சின்னத்தில் களமிறங்குவதற்கு ஏற்பாடாகியுள்ளதாக அறியமுடிகின்றது.

கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள பேச்சில் கூட்டு சேர்வது சாத்தியமாகின் அது முஸ்லிம்கள் அற்ற கூட்டாக இருக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. அதாவது காலாகாலமாக முஸ்லிம்கள் கூட்டுக்குள் நுழைந்து தமிழ் மக்களின் வாக்குகளில் பள்ளிவாயலில் கொடுக்கும் உபதேசத்தின் பிரகாரம் தமது வேட்பாளர்கள் தெரிவாகக்கூடிய விதத்தில் புள்ளடியிடுவர் என்பது யாரும் அறிந்த விடயம். எனவே இத்தேர்தலில் அந்த தவறுக்கு இடம்கொடுக்கப்போவதில்லை என்ற விடயத்தில் கொழும்பும் உடன்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

எவே இந்த நிபந்தனை மற்றும் கூட்டு ஒன்றுக்கான முயற்சிகள் வெற்றிபெறின் கருணா தாமரை மொட்டுடன் நாளை மறுதினம் மட்டுநகர் திரும்பலாம் என அறியமுடிகின்றது. அவ்வாறு திரும்பின் கருணா அம்பாறையிலும் மனைவி மட்டக்களப்பிலும் மொட்டை நீட்டவுள்ளனர். அன்றில் மட்டக்ககளப்பிலிருந்து அம்பாறைக்கு கப்பல்பயணம்..


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com