Monday, March 30, 2020

வெலிகம - வெலிப்பிட்டிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கொரானோ தொற்று அபாயம்!

கொரானோ வைரசுத் தாக்குதலினால் அட்டுலுகம, அக்குரணை, புத்தளம் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அபாய நிலைமை போன்று வெலிகம - வெலிப்பிட்டிப் பிரதேச செயலக்திற்குட்பட்ட பகுதிகளிலும் கொரானா வைரசு தொடர்பில் அபாய நிலைமை ஏற்படலாம் என வெலிப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை அறிவித்தது.

அந்த விசேட அறிவித்தலில் மீன் பிடித்தல் தடை செய்யப்பட்டதுடன், விளையாட்டுக்களில் ஈடுபடுவதும் முற்று முழுதாகத் தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த பிரதேச செயலகத்திற்குட்பட்டபகுதிகளில் உள்ள ஊர்களுக்கு வேறு ஊர்களிலிருந்து எவரேனும் வருகை தந்தால் உடனடியாக வைத்திய அதிகாரப் பணிமனைக்கு அறிவிக்குமாறும், யாரேனும் ஒருவர் கொரானோ தொற்றுக்கு உள்ளாகி அவர் பற்றிய விடயங்களை மறைத்தால் அதுதொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தது.

இதுதவிர, கொரானோ வைரசிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றிய விடயங்களையும் விலாவாரியாக ஒலிபெருக்கியில் ஊர் ஊராக அறிவிக்கப்பட்டது.

'இவ்விடயம் தொடர்பில் வெலிகம, வெலிப்பிட்டிய சிவில் பாதுகாப்புத் தலைவர் எம்.இஸட்.ஏ. சப்ரி கருத்துத் தெரிவிக்கையில், முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பதற்காகவே வெலிப்பிட்டிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் அறிவிப்புச் செய்தனர். கொரோனா வைரசு தாக்கப்பட்டதற்குச் சான்றாகவோ, சந்தேகத்தின் பேரிலோ யாருமே இப்பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இனங்காணப்படவில்லை. இது தொடர்பில் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' எனவும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com