தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் இலகுவாக மக்களுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை
தற்போதைய அசாதாரண சூழலில் தரமான கடலுணவுகளை நியாயமான விலையில் இலகுவாக மக்களுக்கு கிடைப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் (27.03.2020) ஆழ்கடல் மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்கள் மற்றும் மீன் ஏற்றுமதியாளர் பிரதிநிதிகள் ஆகியோருடன் குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் ஈடுபட்டார்.
ஏற்கனவே நேற்று காலை பேருவளை மீனபிடித் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அங்கு சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி கடற்றொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை அவதானிதார்.
அதனை தொடர்ந்து டிக்கோவிற்ற துறைமுகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், ஆழ்கடல் மீன்பிடிக் கலங்களில் இருந்து மீன்கள் இறக்கப்படும் செய்ற்பாடுகளையும் நேரடியாக அவதானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment