Sunday, March 22, 2020

சுய தனிமைப்படுத்தல் நோயே கொரோனா - வௌிவந்துள்ளது வர்த்தமானி அறிவித்தல்

கோவிட் - 19 எனும் பெயருடைய கொரோனோ வைரஸால் பரவுகின்ற நோயானது சுய தனிமைப்படுத்தல் நோய் என, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி விசேட வர்த்தமானி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தவிர்ப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஊரடங்குச் சட்டத்தைத் தற்காலிகமாக தளர்த்தும் சந்தர்ப்பங்களில் அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்பட வேண்டும் என மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கைக்கு ஏற்பவே குறித்த திணைக்களத்தின் ஆணையாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோவிட் 19 ஆட்கொல்லி வைரசு என்பதனால் அரசாங்கம் அதனை முற்று முழுதாக ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், அதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு பொதுமக்கள் செயற்படாதவிடத்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு மதுவரித்திணைக்களம் தயாராகவிருப்பதாகவும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை உதாசீனம் செய்வோர் பற்றி 1913 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com