Monday, March 30, 2020

ஏப்ரல் மாதம் வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துக! இன்னும் 6 மாதங்கள் சென்றாலும் இயல்புநிலை ஏற்படாது! -

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் அல்லது மக்களின் நடமாட்டத்தை வன்மையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என அரசாங்க மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேக்கர தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை மிகவும் கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கின்றது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. நாட்டுக்குள் கொரோனாவின் பரவலானது பேரளவில் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள நிலையில் சில விடயங்களையேனும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்குக் குறைந்தது ஆறு மாதங்களேனும் செல்லும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com