Thursday, February 13, 2020

தமிழரசுக் கட்சி தவிசாளர் வேழமாலிகிதனின் ஊழல்களை அம்பலப்படுத்தியது கணக்காய்வு அலுவலகம்

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் மீது தொடர்ச்சியாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் பொது அமைப்புகள் சில பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கவனத்திற்குகொண்டு சென்றும் அவரும் அதனை கண்டுகொள்ளாத நிலையில், வேளமாலிகிதனின் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளில் ஒன்றை இலங்கையின் தேசிய கணக்காய்வு அலுவலகம் அம்பலப்படுத்தியுள்ளது.

பணத்தை கொள்ளையடிக்கும் பிரதான நோக்குடன் தவிசாளர் இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மீது அதிகளவு ஆதன வரி சுமையை சுமத்தி அதிகளவு பணத்தை பெற்றுவருவதன் பின்னணி இதுவெனவும் பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது.

கிளிநொச்சி நகரில் பசுமைபூங்காவில் கரைச்சி பிரதேச சபையால் அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம் எவ்வித சட்டத்திட்டங்களுக்கும் உட்படாது அமைக்கப்பட்டுள்ளது என தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொங்கு பாலம் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையின் பிரதி ஒன்றை கோரி கிளிநொச்சி உள்ளுராட்சி திணைக்களத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரப்பட்டதற்கு அமைவாக வழங்கப்பட்ட விசாரணை அறிக்கையின் மூலமே மேற்படி முறைகேடுகள் தெரியவந்துள்ளது.

கரைச்சி பிரதேச சபையால் பசுமை பூங்காவில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகதின் விசாரணை அறிக்கையில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

தொங்கு பாலத்தின் வேலைகள் நிறைவேற்றப்பட்டிருந்த போதும் 1989 ஆம் ஆண்டின் வர்த்தமானி அத்தியாயம் vii இன் 169-173 பிரிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக செலவு மதிப்பீட்டுகள் எதுவும் மேற்கொள்ளப்படாது பாலம் அமைக்கப்பட்டுள்ளது. எனவும்

வட மாகாண சபையின் 2017 பெப்ரவரி 15 ஆம் திகதிNP/09/FRM/CIR2017 இலக்க மாகாண நிதி சுற்றுநிருபம் PF/06/2015(1) பிரதேச சபைகள் பிரிவு பெறுகைகள் குழுவின் கீழ் ஆக குறைந்தது மூன்று கூறுவிலை கோரல் பெறப்பட்டிருக்க வேண்டும் ஆனால் தொங்கு பாலம் விடயத்தில் அவை எதுவும் நடைபெறவில்லை.


மேலும் 2019 -12 -30 திகதி கடித்தின் இறைமகன் ஒட்டுத் தொழிற்சாலை 2019 நவம்பர் 16 ஆம் திகதியிலிருந்து 2019 டிசபம்ர் 30 வரை கரைச்சி பிரதேச சபையுடன் எவ்வித வேலை உடன்படிக்கையும் இன்றி 18 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதிக்கு சபையின் வேண்டுகோளுக்கு அமைய தன்னால் வேலைகள் செய்யப்பட்டதாக எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்
அத்தோடு 1985 ஏப்ரல் 15 ஆம் திகதிய வர்த்தமானி அமைய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

திணைக்கள நடவடிக்கை அமைவாக மூலதன வேலை ஒன்றை மேற்கொள்ள வேண்டுமாயின் வருட பாதீட்டில் அது உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் தொங்கு பாலம் உள்ளடக்கப்படவில்லை.

எனவே தொங்கு பாலம் அமைத்து முடிக்கும் வரை கரைச்சி பிரதேச சபையினரால் எந்த வித சட்ட நடைமுறைகளுக்கும் உட்படாது பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது பணத்தை கொள்ளையடிக்கும் ஒரேயொரு நோக்குடன் பிரதேச சபையின் தவிசாளர் இவ்வாறு நடந்துள்ளதாக குற்றம் சாட்டுப்பட்டுள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com