Wednesday, January 15, 2020

நீதிமன்ற உத்தரவை மீறி குருகந்தவில் தைப்பொங்கல் கொண்டாட்டம். வாக்குவேட்டைக்கான அடித்தளம்

முல்லைத்தீவு, நயாறு குருகந்த ரஜமகா விகாரையின் எல்லையில் உள்ள நிராவிய பிள்ளையார் விநாயகர் கோவிலில் இன்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் தலைமையில் தைப்பொங்கல் நிகழ்வினைக் கொண்டாடவுள்ளதாக ஊர்மக்கள் குறிப்பிட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் ரீ. ரவிஹரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் தமிழ் மக்களும் இந்தத் தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

விகாரையின் முன்றலில் தகரத்தினால் சிறு குடிசை கட்டி தைப்பொங்கலைக் கொண்டாடவுள்ளனர்.

சென்ற வருடம் தைப்பொங்கல் விழாத் திட்டம் கொண்டாடியபோது விகாரையின் உரிமம் குறித்து பிரச்சினை ஏற்பட்டது.

விகாரையில் அன்று பணியாற்றிய காலஞ்சென்ற கொழும்பு மேதாலங்காராதிபதி அவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அன்று அழுத்தம் கொடுத்துள்ளதுடன், விகாரையின் உரிமை தொடர்பிலும் கோவிலின் உரிமை குறித்தும் முல்லைதீவு நீதவான் நீதிமன்றில் வழக்கும் தொடரப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணையின் முடிவாக, முல்லைத்தீவு நயாரு குருகந்த ரஜமகாவிகாரை நிலப்பகுதியில் இருந்த கோவில் முல்லைத்தீவு நிராவி பிள்ளையார் விநாயகர் கோவில் என பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் சென்ற மே மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கிராம மக்கள் குறிப்பிடும்போது, விகாரை தொடர்பில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினைக் கருத்திற் கொள்ளாமல் இந்தக் குற்றத்தைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தைப்பொங்கலைக் கொண்டாடுவதனூடாக செய்துள்ளனர் எனக் கூறினர்.

தற்போது விகாரையின் பாதுகாப்புக் கருதி பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com