Sunday, January 12, 2020

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு துரோகிகளின் ஏக பிரதிநிதிகள் ஆனந்தசங்கரி

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அங்கீகரிக்க கோரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு துரோகத்தின் ஏக பிரதிநிதிகளாகவுமம், தியாகத்திற்கு மாறுபட்டவர்கள் என்பதையும் நான் பிரேரிக்கிறேன் என ஆனந்தசங்கரி கருத்து தெரிவித்தள்ளார்.

கிளிநொச்சியில் தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தமழ் தேசிய கூட்டமைப்பில் உங்களிற்கு எவ்வித உரிமையும் கிடையாது. அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்தது நான். எனக்கு தெரியாது சேனாதிராஜா எப்படி அந்த கதிரையில் வந்து குந்தினார் என்பதும் தெரியாது. எப்படி சம்பந்தன் அவர்கள் இந்த கட்சியின் தலைவராக செயற்படுகின்றார் என்பதும் யாருக்கும் தெரியாது. இவ்வாறு துரோகங்கள் மத்தியில் வந்தவர்கள் இவர்கள். இன்று பழைய குருடி கதவை திறடி என்பது போன்று சுமந்திரன் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றார். தமிழ் மக்களிற்கும் தியாகங்களிற்கும் துரோகம் செய்துவிட்டு மீண்டும் ஆணை தாருங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறுகின்றனர். நேற்றைய பத்திரிகையில் சுமந்திரன் அவர்கள் ஏக பிரதிநிதிகளாக தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆணையை தர வேண்டும் என தெரிவித்த செய்தியினை பார்க்க கிடைத்தது. நீங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஆணையை ஏன் தரவேண்டும். எதற்காக தர வேண்டும்? உங்களை துரோகத்தின் ஏக பிரதிநிதிகளாகவுமம் தியாகத்திற்கு முழுக்க முழுக்க மாறுபட்டவர்கள் என்பதையும் நான் பிரேரிக்கிறேன். நீங்கள் தேர்தலில் பங்கு கொள்ளவோ, மக்களை பிரநிதித்துவப்படுத்தவோ எந்தவித தார்மீக கடமையும் உரிமையும் கிடையாது என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றேன் என தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்திலாவது, வாயை மூடியவர்களாக தேர்தலிலிருந்து ஒதுங்குங்கள். தலைமை மாறவேண்டும். தலைமையை யார் மாற்றியது? எந்த தலைமை இருந்த இடத்தில் எந்த தலைமை இருக்கின்றது? பல்வேறுபட்ட தலைவர்களை கொண்ட தமிழர் விடுதலைகூட்டணியை ஒதுக்கிவிட்டு, சம்பந்தர் சேனாதிராஜா தலைமையிலான தலைமையை இன்றுவரை இந்த கட்சி கொண்டுள்ளது. சம்பந்தர் ஒருகாலமும் தமிழரசு கட்சியில் இருக்கவில்லை என்பதை நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுவேன். இப்புாது 70வதாவது ஆண்டு கொண்டாடுகின்றார். 40 வருடாமகா இயங்காத கட்சிக்கு 70ம் ஆண்டு கொண்டாடுகின்றனர். சேனாதிராஜா எப்படி வந்தார்? தந்தை செல்வா இருந்த இடத்தில் சேனாதிராஜாவா? இது வேடிக்கையாக இல்லையா? சேனாதிராஜாவே கதவை பூட்டிவிட்டு சிரித்திருப்பார். இப்புாதும் நான் கேட்டால் சிரிப்பார். செல்வாநாயகம் அவர்களின் கால் தூசுக்கு பெறுமதியல்லாத நான் எவ்வாறு அவரது கதிரையில் இருந்தேன் என்பதை நினைக்கும்போது விக்ரமாகித்தன் கதைதான் ஞாபகம் வரும். தலமைப்பதவிக்கு ஆசைப்பட்டமையே காரணம். நான் தலைமை பதவிக்கு ஆசைப்படவில்லை. நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி 40 வருடங்களிற்கு பின்னர்தான் எனக்கு தலைமை பதவி கிடைத்தது. இன்றாவது உணருங்கள். புாதிய அளவு சம்பாதித்துவிட்டீர்கள். இன்றும் உங்களிற்கு என்ன வேண்டம்? பதவி பெற்றுவிட்டீர்கள். உறவுகள் சொந்தம் பந்தம் என அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்துவிட்டீர்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு பிச்சைக்காரரைகூட காணாத இடத்தில் இன்று வறுமை தாண்டவம் ஆடுகின்றது.

இந்த நிலையில் நீங்கள் குாட்டைகள் புான்று வீடுகளை அமைக்கின்றீர்கள். நாங்கள் அரசாங்கத்தில் வாகனம் எடுத்தபோது சேனாதிராஜாவும் சேர்ந்துதான் சொன்னார் கேட்டது தமிழீழம் கிடைத்தது ஜப்பான் ஜீப் என்று. ஜப்பான் ஜீப் கிடைத்தது 25000 ரூபாவிற்கு. சேனாதிராஜாவிற்கு கிடைத்த வாகனத்திற்கான கடதாசியின் விலை மாத்திரம் 42 மில்லியன். வானகனத்தின் பெறுமதி அதன் இரு மடங்குகளாக இருக்கும். உங்கள் ஏமாற்றுகள் எல்லாம் போதும். இனியும் ஏமாற்றாதீர்கள். விடுதலைப்புலிகள்தான் ஏக பிரதிநிதிகள் என கூறி மக்களையும் புலிகளையும் ஏமாற்றி புலிகளை அழித்ததன் பிறகு இப்புாது கேட்கின்றார் எங்களிற்கு ஏக பிரதிநிதிகள் அந்தஸ்தை தாருங்கோ நாங்கள்தான் பேச வேண்டும் என்று. தயவு செய்து நீங்கள் மட்டும் பேச வேண்டாம். மற்றவர்கள் பேசட்டும். நீங்கள் என்ன பேசினீர்கள் என்பதும், என்ன பேசுவீர்கள் என்பதும் எமக்க தெரியும். உங்கள் நிகழ்ச்சி நிரல் என்ன என்பதும் எமக்க தெரியும்.

மக்கள் தலைமையை மாற்ற சொல்லி கேட்கிறார்கள். இருந்த தலைமையை என்னிடம் தாருங்கள் என்னால் பிரச்சினைகளை தீர்க்க முடியும். சமஸ்டி இனி சரிவராது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இந்திய முறையிலான தீர்வை முன்வைத்து தமிழர் விடுதலை கூட்டணி போட்டியிட உள்ளது, இந்திய முறையிலான தீர்வை தற்புாது உள்ள நாட்டின் இரு பிரதான தலைவைர்களும் அறிந்தவர்கள். அவர்கள் அதனை ஏற்றவர்கள். இந்த நிலையில் குறித்த முறையை முன்னிலைப்படுத்தி நாம் போட்டியிட உள்ளோம். கிழக்கில் உள்ள பலருடன் பேசியுள்ளோம். அவர்களும் இணைந்த செயற்படுவதற்கு உள்ளனர். அதேபோன்று வடக்கிலும் அவ்வாறான கூட்டு ஒன்று உருவாக்கப்படும்.

இந்த நிலையில் நான் பகிரங்கமான அழைப்பினை விடுக்கின்றேன். தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற அத்தனை பேரும் மீட்டும் இணையுங்கள். எனக்கு வயது 87 ஆகியுள்ளது. இந்த நிலையில் பாரம்பரிய கட்சியினை பாதுகாப்பதற்கான சூழல் தற்புாது எழுந்துள்ளது. வெவ்வுறு காரணங்களை கூறி தமிழர் விடுதலை கூட்டணியிலிருந்த பிரிந்து சென்று தமிழரசு கட்சியில் இணைந்தவர்கள் இன்று விட்ட தவறுகளை உணர்கின்றீர்கள் என நம்புகின்றேன். இந்த நிலையில் தற்புாது ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில்கொண்டு மீண்டும் இந்த கட்சியை பலம் மிக்க கட்சியாக செயற்படுத்த மீள இணையுமாறு அழைக்கின்றேன் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com