Thursday, January 23, 2020

வரிச்சுமையை தாங்கமுடியாத வர்த்தகர் கிளிநொச்சி பிரதேச சபை முன் சாகும்வரை உண்ணாவிரம்..

கிளிநொச்சி தமிழரசு கட்சியின் ஆட்சியில் உள்ள கரைச்சி பிரதேச சபையால் மக்களிடம் அதிகரித்த வீதத்தில் அறவிடப்பட்டு வருகின்ற ஆதனவரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வர்த்தகர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அதிகரித்த ஆதன வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கிளிநொச்சி நகரில் வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளன.


கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் கடந்த ஆண்டு இறுதியிலிருந்து ஆதனவரி அறவிப்பட்டு வருகிறது. இநத ஆதன வரியானது இலங்கையில் எங்குமில்லாத அளவுக்கு அதிகரித்த வீதமான பத்து வீதமாக அறவிடப்பட்டுவருகிறது. இது கிளிநொச்சி போன்ற இலங்கையில் வறுமையில் முன்னிலை வகிக்கும் மாவட்டத்திற்கு பொருத்தமற்றது. யாழ்ப்பாணத்தில் கூட நான்கு, ஜந்து வீதங்களில் ஆதனவரி அறவிடப்படுகின்ற போது கிளிநொச்சியில் கரைச்சி பிரதேச சபையில் மட்டும் பத்து வீதம் அறவிடப்படுகிறது. இது போரினால் பாதிக்கப்பட்டு படிப்படியாக முன்னேறி வருகின்ற மக்கள் மீது சுமத்தப்படுகின்ற பெரும் சுமையாகும் எனத் தெரிவித்த வர்த்தகரான கு.மகேந்திரன், ஆதனவரியை நான்கு வீதமாக குறைக்குமாறு கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

தனது மக்கள் நலன் சார்ந்த இப் இப்போராட்டத்திற்கு வர்த்தகர்கள், பொது அமைப்புக்கள், அரசியல் தரப்பினர்களின் ஆதரவையும் கோரிநிற்கின்றார்.

இதற் ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி நகரில் உணவகங்கள், மருத்தகங்கள் தவிர ஏனைய வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டு காணப்பட்டன. இதன் போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கரைச்சி பிரதேச சபையே!சுமத்தாதே! சுமத்தாதே! மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தாதே!மீண்டெழும் கிளிநொச்சியை வரிச்சுமையால் நசுக்காதே!நியாயமான வரியை அறவிடு, மக்களுக்கு சேவையினை வழங்கு!மரத்தால் வீழ்ந்த மக்களை மாடு மிதித்த கதையாய்மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தாதே!மக்களுக்கான சேவைகளை வழங்காது
வரிகளை மாத்திரம் அறவிடாதே!கழிவுகளை அகற்ற முடியாத உனக்கு அதிகரித்த ஆதனவரி எதற்கு?இலங்கையில் எங்குமில்லாத அளவுக்கு
அதிகரித்த ஆதன வரியை அறவிடுவது நியாயமா?குண்டுகளால்; தாக்கப்பட்ட கிளிநொச்சி மக்களை
வரியால் தாக்காதே! வரி மக்களின் நலனுக்காகவா உனது வசதிக்காகவா அறவிடுகிறாய் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்.


இப்போராட்டத்திற்கு வர்த்தக அமைப்புகள், மக்கள் அமைப்புக்கள், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, பொது மக்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முசந்திரகுமார் ஆகியோர் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டிருந்தனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com