48 YouTube Chanal களுக்கு எதிராக ஹிருணிக்கா முறைப்பாடு
முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமயநாயக்க மேற்கொண்டு குரல் தொலைபேசி உரையாடல்கள் குரல் பதிவுகள் வெளியாகி நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியாகேவே 48 யூடியூப் செனல்களுக்கு எதிராக, அந்நிறுவனத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தனது பிரத்தியேக பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தான் மேற்கொண்ட உரையாடல்கள் எனக் கூறப்படும் குரல் பதிவுகளை பதிவேற்றம் செய்துள்ள 48 யூடியூப் செனல்களுக்கு எதிராகவே தான் முறைப்பாடு செய்துள்ளதாக ஹிருணிக்கா பிரேமசந்திர தனது பிரத்தியேக பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஹிருணிக்கா தனது பேஸ்புக் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
48 யூடியூப் சேனல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை திரிபுபடுத்தப்பட்ட, போலியான குரல் பதிவுகளை வெளியிட்டுள்ளன. இந்த சேனல்களை யூடியூப் அகற்றும். எனது பெயரை கெடுப்பதன் மூலம் சம்பாதிக்க முயன்றவர்களுக்கு நல்வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment