Thursday, January 2, 2020

19 வயதில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதி ஒருவர் சிறையில் 46 வயதில் மரணம்

1993 ஆம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு இன்று வரை சிறையில் இருந்த அரசியல் கைதி ஒருவர் நேற்றிரவு 01-01-2020) தனது 46 வயதில் சுகயீனம் காரணமாக இறந்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி வீட்டில் இருந்த போது கிழக்கில் 600 காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபராக 1993 ஆண்டு தனது 19 வயதில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு மொறக்கொட்டான்சேனை தேவாலய வீதியைச் சேர்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் என்ற நபரே தனது 46 வயதில் நேற்றிரவு(01) உயிரிழந்துள்ளார்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு சிறைச்சாலையில் சீரான மருத்துவ வசதிகள் இன்மையால் கடந்த சில மாதங்களாக கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் மகசீன் சிறையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார் எனவும், பின்னர் அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

அதிகளவு காலம் சிறையில் இருந்த மூத்த அரசியல் கைதியாக இவர் இருந்துள்ளார். இவரது பெற்றோர் ஆரம்ப காலங்களில் இவரை வந்து பார்வைியிட்ட போதும் பின்னர் அவர்களும் மகனின் நினைவுகளுடன் மரணித்து விட்டனர். இதன் பின்னர் இவரை எவரும் சிறைச்சாலைக்கு வந்து பார்வையிடுவது கிடையாது.

இன்றுவரை புலம்பெயர் தேசங்களில் சிறைச்சாலையிலுள்ளோரை பராமரிக்கவென நிதி வசூலிக்கப்படுகின்றது. ஆனாலும் குறித்த நபர் சிறைச்சாலையில் அநாதரவற்ற நிலையிலிருந்தபோது எவரும் அவருக்கு உதவ முன்வரவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

புலிகளின் பெயராலும் சிறையிலுள்ளோரின் பெயராலும் அரசியல் பிளைப்பு நடாத்தும் பேர்வழிகளே தமது சகாவின் மரணத்திற்கு பொறுப்பு கூறவேண்டுமென சிறைச்சாலைக் கைதிகள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com