Wednesday, November 6, 2019

MCC ஒப்பந்தத்தில் அவசரமாகக் கைச்சாத்திடுமாறு அமெரிக்கா அழுத்தம்!

சர்ச்சைக்குரிய எம்.சி.சி ஒப்பந்தத்தில் கூடிய விரைவில் கைச்சாத்திடுவதற்கு அமெரிக்க தூதரகம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது என கடந்த சில நாட்களாக பேசப்பட்டுவருகின்றது.

இதற்கிடையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகள் உட்பட நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், இலங்கையின் பிரமுகர்கள் குழுவொன்று ஒன்றிணைந்து இலங்கையின் இறையாண்மை மற்றும் நில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரி இன்று காலை அமெரிக்க தூதரகத்திற்கு ஒரு மகஜர் கையளித்துள்ளனர்.

ஏராளமான மதகுருமார்கள், முக்கிய பிரதிநிதிகள், கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் மூத்த உயிரியல் ஆசிரியர் திஸ்ஸா ஜனநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


இலங்கையின் இறையாண்மை மற்றும் இலங்கையின் இறையாண்மை மீதான அத்துமீறலை நிறுத்துமாறு கோரியே இந்த மகஜர் கையளிக்கப்பட்டிருப்பதாகத் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தம் இலங்கைக்க்கான ஓர் ஆதரவு என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலைனா டெப்லிட்ஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த உடன்படிக்கையில் அவசரமாகக் கைச்சாத்திடப்பட வேண்டும் எனவும் அவர் தெளிவுறுத்தியுள்ளார்.

இந்த மகஜரைக் கையளித்துவிட்டுப் பின்னர், இந்தக்குழுவானது அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக அமைதியானமுறையில் ஆர்ப்பாட்டமொன்றையும் நடாத்தியது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com