Monday, November 11, 2019

யாரோ பெற்ற பிள்ளைக்கு உரிமை கோரும் சிறிதரன் எம்.பி

இலங்கை அரசாங்கம் தேசிய, மாகாண மற்றும் உள்ளூர் சாலைகளில் போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் கிராமப்புற சமூகங்கள் மற்றும் சமூக பொருளாதார மையங்களுக்கிடையேயான இணைப்பை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த சாலை முதலீட்டு திட்டத்தை (ஐ.ரோட்) உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

இவ் ஐ.ரோட் திட்டத்தின் கீழ், தெற்கு,வடக்கு, சபராகமுவா, மத்திய, வட மத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் மேற்கு மாகாணங்கள் உள்ளடக்கப்படுகின்றன. இத்திட்டத்திற்கான நிதியினை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குகின்றமை குறிப்பிடதக்கது.

இதேவேளை இத் திட்டத்தின்படி வடக்கிற்கு மொத்தம் 1200km உள்ளூர் வீதிகளை காப்பற் வீதிகளாக ஆக்கும் திட்டமே இது.

இத்திட்டத்தற்குரிய வீதிகள் யாவும் மாவட்ட செயலகத்தால் அடையாளப்படுத்தி வீதி அபிவிருத்தி அதிகார சபையால் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு 2017ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டு தற்பொழுது நிதி கிடைத்த நிலையில் மாவட்ட செயலகத்தால் அடையாளப்படுத்தப்பட்ட வீதிகளுக்கான திருத்த வேலைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட கிளிநொச்சி பளை வீதி,முறுகண்டி-கனகபுரம் வீதி,தருமபுரம் வைத்திய சாலை முதல் வட்டக்கச்சி சந்தை வரையான பாதைகள் புனரமைப்பு செய்யும் நிகழ்வில் கிளிநொச்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாரளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அழைக்கப்பட்டிருந்தார்

இந்நிகழ்வுகளில் பாரளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கலந்து கொண்டதோடு அந்நிகழ்வில் எடுத்த புகைப்படங்களை இணையத்திலும் தனது முகநூலில் பதிவிட்டதோடு தனது கடும் முயற்சியால் கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஐ.ரோட் கருதிட்டம் கிடைத்ததாகவும் செய்தி வெளியிட்டுவருகின்றார்

இந்த திட்டம் பின்னடைவை சந்திப்பதாக சிறிதரன் எம்.பி பாராளுமன்றில் அடிக்கடி முழங்கியது என்னவோ உண்மைதான் ஆனால் இந்த திட்டத்திற்கும் சிறிதரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுடன் அரசாங்கம் நாடளாவிய ரீதியில் கொண்டு வந்துள்ள இக் கருத்திட்டத்தை யார் செலவு செய்ய யார் உரிமை கோருவது? என்று கிளிநொச்சி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதே வேளை தீலிபனின் நினைவு தினத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தீலிபன் உண்ணாவிரதம் இருந்து மறைந்து சரியாக ஒருவருடத்தில் தான் தீலிபனுக்கு நினைவு தூபியை கட்டியதாகவும் அதனை அன்றைய மாநகர சபை ஆணையாளர் cvk சிவஞானத்தை கொண்டு திறப்பு விழாச் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.இச்செய்தியை cvk சிவஞானம் கேட்டபொழுது அவர் மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் காலங்களில் இவ்வாறாக உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பொது மேடைகளில் சிறிதரன் அவர்கள் தெரிவிப்பது வளக்கமாகி வருவதாக அரசியல் அவதானிப்பாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com