Saturday, November 30, 2019

2020 பெப்ரவரி 3 ஆம் வாரம் பாராளுமன்றம் கலைக்கப்படும்!

தற்போதைய பாராளுமன்றம் நான்கரை ஆண்டுகளைக் கடந்தவுடனேயே அதனைக் கலைத்து, பொதுத்தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகின்றது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் இதுதொடர்பில் நேற்று முன்தினம் நீண்ட நேரம் கலந்தாலோசித்தாகத் தெரியவருகின்றது.

2015 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதிபாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட்டதுடன், 19 ஆவது அரசியல் யாப்பிற்கு ஏற்ப நான்கரை ஆண்டுகள் பூர்த்தியாகும்வரை பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதிக்கு இயலாது. தற்போதைய பாராளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியே நான்கரை ஆண்டுகளைப் பூர்த்திசெய்கின்றது. எனவே, பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அமைச்சர்கள் பிரேரணை முன்வைத்துள்ளனர்.

அதற்குக் காரணம் தற்போதைய சபாநாயகர் தனது பதவியிலிருந்து விலகமாட்டேன் எனக் குறிப்பிட்டிருப்பதேயாகும். கூடுதலான பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இருப்பதனால், சிறப்பாகப் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பொதுத்தேர்தல் நடாத்தப்படுவது அவசியமானது என ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

தற்போதைக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த 96 பா.உறுப்பினர்களின் ஆதரவும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து (சபாநாயகர் தவிர) பா.உ 106 பேரினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 15 பேரினதும், மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் 6 பேரினதும், பா.உ குமார வெல்கமவினதும் ஆதரவு கிடைத்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com