Saturday, October 19, 2019

‘‘TNA வின் பிரேரணைகள் அடிப்படைவாதத்தின் ஆரம்பமோ என சந்தேகிக்க வைக்கிறது! - அஸ்கிரிய பீடம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள பிரேரணைகள் அவர்களின் மோசமான எதிர்ப்பார்க்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்டவை என அஸ்கிரிய பீடத்தின் துணைத் தலைவர் வெடருவே உபாலி தேரர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்காக விசேட செய்தியொன்றை வழங்கியுள்ள அவர், இந்தப் பிரேரணைகள் வரவேற்பது தொடர்பில் வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் மட்டுமன்றி, தெற்கில் உள்ளவர்களும் ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்துப்பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரேரணைகள் 30 வருடங்கள் தொடர்ந்து நடாத்திய யுத்தத்தின் அடிநாதமான கொள்கைகளுக்கும் அப்பாற்சென்ற பிரேரணைகளாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் தனிநாடு எண்ணப்பாடு, பெடரல் தீர்வுப் பிரேரணை, சிங்களக் கிராமங்களை வடக்கிலிருந்து அகற்றுதல் முதலிய பிரேரணைளும் உள்ளடங்கியுள்ளன. இது யாரின் தேவைப்பாடு என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது எனவும் அவர் தெளிவுறுத்தியுள்ளார்.

இந்தப் பிரேரணைகள் அரச சார்பற்ற அமைப்புக்களினது அறிவீனமற்ற பிரேரணைகளே எனவும், இந்தப் பிரேரணைகள் அடிப்படிடைவாதிகளின் செயற்பாடுகளை ஒத்த தமிழ் அடிப்படைவாதத்தின் ஆரம்பமோ எனச் சந்தேகிக்க வைக்கின்றது எனவும் அஸ்கிரிய பீடத்தின் துணைத் தலைவர் வெடருவே உபாலி தேரர் அவ்வூடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com