சஜித்தை ஜனாதிபதி வேட்பாளாராக நியமிக்காது விட்டால் நாங்கள் அமைதியாவோம்... ஐ.தே.க பா. உறுப்பினர்கள் 52 பேர் கைச்சாத்து!

ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்யக்கூடிய வேறு ஒருவரும் இல்லை எனவும், கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்றக் குழு அவரை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர், சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கக் கோரி, பாராளுமன்ற உறுப்பினர்கள் 52 பேர் கையாெப்பமிட்ட ஆவணமொன்று கையளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்காதுவிடின் தேர்தல் நடவடிக்கைகளின்போது, அதிலிருந்து விலகி அமைதியாக இருக்கவுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment