Tuesday, July 9, 2019

P625 இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தது.

சீனாவின் அன்பளிப்பான P625 என்ற அதிவேக ரோந்துப்படகு நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. 18 அதிகாரிகள் மற்றும் 92 கடற்சிப்பந்திகளுடன் வந்தடைந்த குறித்த நவீன சிறிய கப்பலை இலங்கைக்கான சீனத்தூதுவர் மற்றும் இலங்கையின் கடற்படைத்தளபதி ஆகியோர் வரவேற்றனர். அதேநேரம் குறித்த கப்பலை வரவேற்கும் பிரமாண்ட நிகழ்வொன்று நேற்று சீனத்தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் கடற்பாதுகாப்புக்கான பிரதான ரோந்துப்படகாக செயற்படவுள்ள குறித்த நவீன கப்பல் 1994 ம் ஆண்டு கட்டப்பட்டது என்பதுடன் இதன் நீளம் 112 மீற்றர்களும் அகலம் 12.4 என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மிகவும் நவீன தொழில்நுட்பங்களை கொண்ட இக்கப்பலில் 100 மி.மி கலிபர்களும் 37 மி.மி கனரக ஆயுதங்களும் பொருத்தப்பட்டுள்ளது.

வான் மன்றும் கடல் எச்சரிக்கை ராடர்கள் பொருத்தப்பட்டுள்ள அதி இலத்திரனியல் மயகமாக்கப்பட்ட இக்கப்பல் இலங்கை எதிர்கொள்ளுகின்ற கடல்வழி அபாயங்களை எதிர்கொள்வதில் பாரிய பங்குசெலுத்தும் என நம்பப்படுகின்றது. குறித்த கப்பல் தொடர்பான பயிற்சி நெறிகள் 110 கடற்படை அதிகாரிகளுக்கு ஷங்காயில் வைத்து வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பயிற்சிகள் திருமை கடற்படைத்தளத்தில் வழங்கப்படவுள்ளது.

குறித்த கப்பல் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் 21 ஏப்பரல் தாக்குதல்களின் பின்னர் இதனை உடனடியாக வழங்க சீன அரசு முடிவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த அதிவேக படகானது கடல்எல்லைப்பபாதுகப்பு , கப்பல்பாதுகாப்பு , காலநிலை அவதானிப்பு , கடற்கொள்ளை முறியடிப்பு என்பவற்றில் ஈடுபடவுள்ளது.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com