Sunday, July 14, 2019

பைசர் முஸ்தபா சட்டவிரோத ஆயுதக் கடத்தல்காரன். போட்டுடைக்கின்றார் கோட்டாவின் சகா நிசங்க சேனாதிபதி.

கடல் பாதுகாப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நிறுவனம் சட்டவிரோத ஆயுத கடத்தலில் ஈடுபட்டு, சிக்கிக்கொண்டதாகவும் நிறுவனத்தை காப்பாற்றி தருமாறு கோரி, முஸ்தபா தனது கையை பிடித்து கெஞ்சியதாகவும் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷசங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரக்னா லங்கா நிறுவனத்தின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தான் சம்பந்தப்படுவதற்கு முன்னர், சேவைகளை வழங்கிய 24 நிறுவனங்கள் சட்டவிரோத ஆயுத விற்பனையில் ஈடுபட்டதாகவும் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் இந்த விற்பனையாளர்களில் அடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக மேலும் தகவல் வெளியிட்டுள்ள நிஷசங்க சேனாதிபதி,

' பல்சர் ஷிபிங் என்று ஒரு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனத்தின் பணிப்பாளரே பைசர் முஸ்தபா. பல்சர் ஷிப்பிங் நிறுவனம் போலி கடிதம் ஒன்றை தயாரித்து, இலங்கை அரசுக்கு தெரியாமல், பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமான ஆயுதங்களை எங்கும் அறிவிக்காமல், செங்கடலில் கப்பல் ஒன்றில் ஏற்றியுள்ளது.

இந்த ஆயுதங்கள் கடல் வழியாக கொண்டு செல்லும் போது ஈரானிய கடல் பகுதியில் அமெரிக்காவில் 7வது இராணுவ அணியிடம் மாட்டிக்கொண்டது. அவர்கள் நடு இரவில் எம்மை தொடர்புக்கொண்டு அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதாக எமக்கு அறிவித்தனர்.

நாங்கள் அவர்களிடம் மன்னிப்பு கோரி, அதிகாலை மூன்று மணிளவில் 50 ஆயிரம் டொலர்களை செலுத்தி, படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அனுப்பி, கப்பலில் இருந்த சட்டவிரோத ஆயுதங்களை கரைக்கு கொண்டு வந்தோம். பல்சர் ஷிப்பிங் நிறுவனத்தை தடை செய்ய முயற்சித்தார்கள்.

இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஒரு முஸ்லிம் இனத்தவருக்கு சொந்தமானது. நான் இது குறித்து முறைப்பாடு செய்ததும், அமைச்சர் எனது அலுவலகத்திற்கு வந்து மன்னிப்பு கோரினார்.

இங்கு வருவதற்கு வெட்கமில்லையா என்று நான் கேட்டேன். நான் முறைப்பாடு செய்திருக்கின்றேன். எனது அலுவலகத்திற்கு வர வேண்டாம் எனக் கூறினேன்.

என்னை வெளியில் சந்திக்குமாறு நான் பைசர் முஸ்தபாவுக்கு கூறினேன். சட்டவிரோதமாக ஆயுதம் விற்பனை செய்தது ஒரு முறை, இரண்டு முறையல்ல, நிறுவனத்தை மூடுமாறு கூறினேன்.

எனது கையை பிடித்து கெஞ்சினார். அந்த இடத்தில் மேலும் சிலரும் இருந்தனர். சாட்சியாளர்களை நான் வரவழைக்கின்றேன். எனது அலுவலகத்தை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

இலங்கையின் ஆயுதங்களை நாம் அறியாமல், பயங்கரவாதிகளுக்கு முதலில் விற்பனை செய்து உதவியரே பைசர் முஸ்தபா. கோப்புகளுடன் என்னிடம் விபரங்கள் உள்ளன. தேவையானால், நான் காட்டுகிறேன் எனவும் நிஷசங்க சேனாதிபதி கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் சேனாதிபதி, சிங்கள வானொலி ஒன்று வழங்கிய செவ்வியில் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com