Wednesday, July 10, 2019

ஞானசார தேரரின் விடுதலைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

ஜனாதிபதியின் தீர்மானம் தனது அடிப்படை உரிமையை மீறியிருப்பதாக கூறி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு தொடர்பாக ஆலோசனை பெற்று விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, பிரசன்ன ஜயவர்தன மற்றும் எல்.டி.பி தெஹிதெனிய ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனு தொடர்பாக ஆலோசனை பெற்று விளக்கமளிக்க கால அவகாசம் வழங்குமாறு சட்டமா அதிபர் சார்பான மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார்.

அதன்படி மனுவை செப்டம்பர் 10ம் திகதி வரை ஒத்தி வைப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்புமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com