Sunday, June 16, 2019

முஸ்லிம் அமைச்­சர்­களின் பதவி விலகல், ரணில் அரங்­கேற்­றிய நாடகம். வாசு­தேவ நாண­யக்­கார

முஸ்லிம் அமைச்­சர்­களின் பதவி விலகல் வெறும் நாடகம் என்­பது தற்­போது நாட்­டு­மக்­க­ளுக்கு தெட்­டத்­தெ­ளி­வாக புல­னா­கி­யுள்­ளது. ரிஷாத் பதி­யு­தீனை பாது­காக்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட ஐக்­கிய தேசியக் கட்­சியின் தந்­தி­ரமே இது. ரிஷாத் பதி­யுதீன் பாது­காக்­கப்­பட்­டதன் பின்னர் இது நிறை­வுக்கு வந்­துள்­ளது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்கள் மீண்டும் தமது பத­வி­களை பொறுப்­பேற்­க­வுள்­ள­தாக வெளி­யா­கி­யுள்ள விடயம் குறித்து கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் ரிஷாத் பதி­யுதீன் மீது பல குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. இது தொடர்பில் அவ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என நாம் பல முறை அழுத்தம் கொடுத்தோம். இருப்­பினும் அதை அர­சாங்கம் உதா­சீனம் செய்து விட்­டது. பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­தாக பல குற்­றங்கள் சுமக்­கப்­பட்­டுள்ள ரிஷாத் பதி­யுதீன் அமைச்­சுப்­ப­த­வியை வகிப்­பது நாக­ரீ­க­மற்­றது. இதை அவரும் உண­ர­வில்லை இந்த அர­சாங்­கமும் உண­ர­வில்லை. இதன் தாக்­கத்தை உணர்ந்த அத்­து­ர­லியே ரத்ன தேரர் உண்­ணா­வி­ரதம் இருக்கும் அள­வுக்கு நிலைமை சென்­றது.

தேர­ருக்கு ஆத­ர­வாக பலர் குரல் கொடுக்க ஆரம்­பித்­ததை அடுத்து நிலை­மையை சமா­ளிப்­ப­தற்­காக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் அரங்­கேற்­றப்­பட்ட நாட­கமே முஸ்லிம் அமைச்­சர்­களின் பதவி விலகல். தற்­போது அரங்­கேற்­றப்­பட்ட நாட­கத்தின் நோக்கம் நிறை­வேறி ரிஷாத் பதி­யுதீன் பாது­காக்­கப்­பட்­டுள்ளார். ஆகவே பதவி வில­கிய அமைச்­சர்கள் மீண்டும் தமது பத­வி­களை பொறுப்­பேற்க போகின்­றனர். இது நாட்டு மக்­களை முட்­டாள்­க­ளாக்கும் ஒரு நாட­க­மாகும். தற்­போது மாநா­யக்க தேரர்­களின் வேண்­டு­கோ­ளுக்கு மதிப்­ப­ளித்து தமது பத­வி­களை மீண்டும் பொறுப்­பேற்க போவ­தாக அவர்கள் அறி­வித்­துள்­ளனர்.

இவர்கள் தமது பத­வி­களை விட்டு விலகும் போது மாநா­யக்க தேரர்­களை கேட்டா வில­கி­னார்கள்?. இவை அனைத்தும் நாட­கமே.

அவ்­வாறு முஸ்லிம் அமைச்­சர்கள் மீண்டும் தமது பத­வி­களை பொறுப்­பேற்­றாலும் ரிஷாத் பதி­யுதீன் அமைச்­சுப்­ப­த­வியை ஏற்­கக்­கூ­டாது அதற்கு அவர் தகு­தி­யற்­றவர். அவர் அமைச்­சுப்­ப­த­வியை ஏற்­பது நாக­ரீ­க­மற்­றது. இதற்கு எதி­ராக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­புக்கு கோத்­தா­பய ராஜ­பக்ஷ உத­வி­ய­தாக முன்னாள் மேல்­மா­காண ஆளுநர் அஸாத் சாலி பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார். இது நகைப்­புக்­கு­றி­ய­தாகும் இவர்கள் எப்­போதும் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு வக்­கா­லத்து வாங்கும் வகை­யி­லேயே தமது கருத்­துக்­களை தெரி­விப்­பார்கள். இவர்­கள்தான் கடந்த காலத்தில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தாக தெரி­வித்­தனர். ஆனால் தற்­போது முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்கு ஆத­ர­வாக செயற்­பட்­ட­தாக தெரிவிக்கின்றனர்.

இதில் எது உண்மை என்பது தான் புரியவில்லை. இவர்கள் கூறும் இருவிடயங்களும் உண்மையாக இருப்பதற்கு சாத்தியமில்லை காரணம் இரண்டும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டது. எனவே இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டில் எது உண்மை எது பொய் என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com