த.தே.கூ ஆட்சியில் யாழ் பஸ் நிலைய கழிவறைகள் நாற்றமெடுக்கின்றது. தயாசிறி ஏளனம்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறு சீரமைப்பு திட்டத்தின் பிரகாரம் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர யாழப்;பாண பஸ்; தரிப்பு நிலையத்திலுள்ள கழிவறைகளக்கூட பராமரிக்க தெரியாத கையாலாகதவர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளனர் என ஏழனம் செய்துள்ளார்.
மேலும் இச்சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பலர் யாழ்பாணத்தில் இல்லை என்றும் அவர்கள் இங்கிருந்தால் மக்களின் தேவைகள் விளங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர் :
கடந்த 30 வருடங்கள் கொடிய போரால் வடக்கு மாகாண மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அந்தப் போரின் அனுபவங்கள் உங்கள் எல்லோருக்கும் உள்ளன. நாங்கள் அமைதியாக இரவில் நித்திரை கொள்ளும்போது நீங்கள் பயத்துடன் நித்திரை கொண்டீர்கள். உறவுகளை இழந்தும் தொலைத்தும் இருக்கின்றீர்கள். இந்தத் துர்ப்பாக்கிய நிலைக்கு மன்னிப்புக் கோருகின்றேன்.' என்றும் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் தட்டாதெருச் சந்திக்கு அருகாமையிலுள்ள லக்ஸ்மி மண்டபத்தில் நேற்றுச் சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் நல்லூர் ஆலயத்தில் விசேட பூசைகளிலும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment