Monday, March 25, 2019

புலிகளால் அச்சுறுத்தல் இல்லை ராமநாதர்களால் தான் என்கிறார் ஆனோல்ட். அது குடும்ப பிரச்சினை என்கிறார் அங்கஜன்.

கொழும்பிலுள்ள பாதாள குழுக்களை கொண்டு புலிகள் சுமந்திரன் , சயந்தன் மற்றும் ஆனோல்டை கொல்ல முனைகின்றார்கள் என புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக புலனாய்வு வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஆங்கில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தது.

மேற்படி பத்திரிகைச் செய்திகளை சாட்சியங்களாக கொண்டு தமக்குள்ள அச்சுறுத்தலை கணக்கில் எடுத்து தனக்கும் தனது சகாக்களான சயந்தன் , ஆனோல்ட் ஆகியோருக்கும் மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சுமந்திரன் குழு மீதான உயிரச்சுறுத்தல் இலங்கை வரலாற்றில் புதியது அல்ல. தமிழ் அரசியல் தலைமைகள் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதபோது வன்செயல் ரீதியாக அல்லது கொலைகள் ஊடாகவே இலக்கை அடைந்திருக்கின்றார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சர்வசக்தியாக சுமந்திரன் உருப்பெற்றுள்ளதுடன், ஆனோல்ட மற்றும் சயந்தன் போன்ற சிலர் சுமந்திரனுக்கு மிக நெருக்கமானவர்களாக மாறியிருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயும், கூட்டமைப்புக்கு வெளியே சைக்கிள் கொம்பனிக்கும் பெரிதும் புல்லரிப்பை கொடுத்துக்கொண்டிருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே புலித்தோல் போர்த்தி நிற்போரும் புலிகளின் அடுத்த பிரதிநிதிகள் நாம் தான் எனக் கூறும் தமிழ் தேசிய முன்னணியினரும் சுமந்திரனின் அழிவினை வாழ்த்தி வரவேற்க காத்திருக்கின்றனர் என்பது வெள்ளிடை மலை.

இதன்பொருட்டு சற்றுகாலத்திற்கு முன்னர் முன்னாள் புலிகளை வைத்து மேற்கொண்ட கொலைமுயற்சி பிசகிப் போனதுடன் சம்பந்தப்பட்டவர்கள் விளக்க மறியலில் இன்னும் இருக்கும் நிலையில், அவ்வாறான கொந்தராத்துக்களை பாரமெடுப்பதற்கு வடகிழக்கிலுள்ள முன்னாள் புலிகள் தயாரக இல்லை.

எனவேதான் புலிகள் தமது இலக்கை அடைவதற்காக பாதாள உலக குழுக்களை நாடியிருக்கின்றார்கள். காரணம் புலிகளது சிந்தாந்தத்தை ஏற்காதவர்கள் தவறுகளை விமர்சிப்பவர்கள் துரோகிகள். எனவே மேற்படி மூவரும் புலிகளின் சித்தாந்தத்தையும் கடந்த கால செயற்பாடுகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சித்திருக்கின்றார்கள். எனவே புலிகளின் தண்டனை அதுதான் என்பது யாவரும் அறிந்தது. அந்தவகையில் அவர்களுக்கு பாதுகாப்பு தேவையானது என்பதில் இலங்கைநெட் இடம் மாற்றுக்கருத்து கிடையாது.

ஆனால், இவர்கள் புலிகளால் தங்களுக்கு அச்சுறுத்தல் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கின்றனர். அவ்வாறு தெரிவித்தால் புலிகளால் தாம் வெறுக்கப்படும்போது தமிழ் மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என நம்புகின்றனர். எனவே பாதுகாப்பை பெற்றுக்கொள்ள கொழும்பிற்கு புலிகளால் அச்சுறுத்தல் என கூறும் மறுபுறத்தில் யாழ்பாணத்தில் மக்களில் காதில் எவ்வாறு பூ சுத்த நினைக்கின்றார்களாயின், ராமநாதன் குடும்பத்தினரால் அச்சுறுத்தலாம் என ஊடகவியலாளர் மாநாடு கூடி இவ்வாறு தெரிவிக்கின்றார் ஆர்னோல்ட.



ஆனோல்டின் கூற்றின் படி அச்சுறுத்தல் கடிதத்தை எழுதியவர்கள் ராமநாதன்களால் அச்சுறுத்தல் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது எனச் தெரிவிப்பதன் ஊடாக தாம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் பாதுகாப்பு புலிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு எதிரானது அல்ல அது ராமநாதன்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கானது எனக் காட்ட முனைகின்றனர்.

ஆனோல்டின் கருத்து தொடர்பாக கருத்துரைத்துள்ள அங்கஜன் ராமநாதன் ஆனோல்ட்டுக்கான அச்சுறுத்தல் குடுப்ப பிரச்சினை சார்ந்ததாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செருக்கன் பிரதேச மக்களுடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டிருந்த அஞ்கஜன் ராமநாதனிடம், மேற்குறித்தவர்கள் மீது விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக ஆனோட் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் கேட்கப்பட்டபோது,
'யாழ். மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்டின் மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அச்சுறுத்தல் தொடர்பில் சிலரை அவர்கள் சாடுகின்றனர்.

அவர்மீது அச்சுறுத்தல் விடுப்பதாக இருப்பின் அவரது மனைவிக்கு அழைப்பு விடுக்கப்படவேண்டியதில்லை. நேரடியாக அவருக்கே அச்சுறுத்தல் விடுக்கப்படும். எனவே அது அவர்களின் குடும்ப பிரச்சினையாக இருக்கலாம்.

ஆனாலும் உயிர் அச்சுறுத்தலிற்கு உள்ளான அவர்கள் பாதுகாப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். எஸ்.ரி.எப் பாதுகாப்பு பெறுவதனால் அவர்கள் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவே அது தொடர்பிலும் கவனம் செலுத்தவேண்டும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



ஆனோல்ட் மனைவி பிள்ளைகளுடன் மைத்திரிபாலவுடன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com