Friday, March 29, 2019

வளைவு உடைப்புக்குப் பொறுப்பேற்று திருக்கேதீச்சர திருப்பணிச் சபையின் இன்றைய ஆட்சிக் குழுவினர் விலக வேண்டும்!

கோருபவர் மறவன்புலவு சச்சிதானந்தன் சிவசேனை

முதுகெலும்பு இல்லாத திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையினரே வளைவு உடைப்பதை தடுக்க முடியாமல் வலுவிழந்து செயற்பட்டனர்.

திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையில் கடந்த பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பலர் தாங்கள் பதவி சுகத்துக்காகவே அந்த ஆட்சியில் தொடர்ந்து ஆண்டுதோறும் இருப்பதை உறுதி செய்கின்றனர். இதற்காகத் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் அமைப்பு விதிகளில் உரிய மாற்றங்களை செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு பொதுக் கூட்டத்தில் உறுப்புரிமை இல்லாதவர்களே கலந்து கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டடை முன்வைத்த திரு. குமார் நமசிவாயம் வெளிநடப்பு செய்ததை நான் இங்கு நினைவு கூர வேண்டும்.

கொழும்பில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பல்வேறு பதவிகளை வகித்து கொண்டிருப்பதால் அவர்களுக்கு திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையில் முழுநேரமாக பணியாற்றக்கூடிய நேரமில்லை.

பிற சபைகளில் உள்ள முரண்பாடுகளால் அதே ஆள்கள் இதே சபைக்குள் வரும்பொழுதும் அதே முரண்பாடுகளை கொண்டுவந்து குழாயடிச்சண்டை குடுமிப்பிடிச் சண்டை வன்முறை என்பவற்றை ஆட்சிக்குழுக் கூட்டங்களில் பயன்படுத்துவதாக அறிந்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன்

31.3.2019 ஞாயிற்றுக்கிழமை கூடப் இருக்கின்ற திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் பொதுக்கூட்டத்தில் முன்பு இருந்தவர்களே தேர்வாகப் போகிறார்கள்.

இவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் குகைக் கோயிலாக இருந்த சிறிய கோயிலை மாபெரும் உலூர்தம்மாள் தேவாலயமாகக் கத்தோலிக்கர் கட்டினர்.

இந்தக் குழுவில் நாளைய கூட்டத்தில் தேர்வாகப் போன்றவர்கள்தான் உலூர்தம்மாள் தேவாலயத் திறப்பு விழாவில் பங்கேற்று வாழ்த்தியவர்கள்.


அடுத்த ஆண்டும் இப்பொழுது பதவியில் இருப்பவர்கள் தொடர்ந்து இருப்பார்களானால் பாலாவி முழுவதும் கத்தோலிக்கர் வசம் போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

முதுகெலும்பில்லாத இப்போதைய ஆட்சிக் குழுவினர் முற்றாக விலக வேண்டும்

ஆற்றலும் வலிமையும் திறமையும் சைவ சமயத்தின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையும் மன்னாரைச் சிவபூமியாக்கக் கருதுகின்ற ஆர்வத்தோடும் அன்போடும் அறத்்தோடும் அருளோடும் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்துக் கத்தோலிக்க ஆக்கிரமிப்பைச் சந்திக்கக் கூடிய முற்றிலும் புதிய அணி ஒன்று திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை ஆட்சி குழுவில் இடம் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

யாம் இரப்பவை நின்பால் பொன்னும் பொருளும் போகமும் அல்ல அன்பும் அருளும் அறனும் என்ற சங்கப் பாடலை நினைவில் கொள்வோம்.

நாம் யார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நழலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் மீண்டும் சொல்கிறேன் பணிவோம் அல்லோம் என்ற அப்பர் பெருமான் வரிகளோடு திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையில் புதிய அணி தேர்வாகி உத்வேகத்துடன் பணியாற்ற வருமாறு அழைக்கிறேன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com