பெருந்தொகை பெறுமதியான வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது
டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு ஒரு தொகை வெளிநாட்டு சிகரட்களை கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மினுவங்கொட பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றுக் காலை 8.35 மணியளவில் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 650 என்ற விமானத்தில் இலங்கையை வந்தடைந்தார். அவரது பயணப் பொதியில் இருந்து 148 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 29,600 சிகரட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 1.6 மில்லியன் ரூபாய் என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment