Thursday, January 3, 2019

இரண்டு சந்தர்பங்களை கூட்டமைப்பினர் இழந்துவிட்டனர் - தவராசா குற்றச்சாட்டு

பேரம் பேசும் சக்தியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீணடித்து விட்டதாக வடமாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்தபோது அவர்
இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு வரைவு வரும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை, ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலமைப்பு வரைவு வரும் என்று கூறிவருகின்றது. அரசியலமைப்பு வரைவு தொடர்பாக நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராக வேண்டும். கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு சந்தர்ப்பங்கள் வீணடிக்கபட்டுள்ளன. அவற்றில் ஒன்று, ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட விடயத்தில் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்திருந்தது.

இரண்டாவது சந்தர்ப்பம், அசாதாரண அரசியல் சூழலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக கூட்டமைப்பு தமது ஆதரவினை வழங்கியமை. இந்த இரண்டு வாய்ப்புக்களையும் கூட்டமைப்பினர் பயன்படுத்த தவறிவிட்டனர். பேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தபோதும் அதனை அவர்கள் வீணடித்துவிட்டார்கள். கூட்டமைப்பினரின் இவ்வகையான நடவடிக்கையினை எவராலுமே ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் தமிழ் மக்களின் மிக நீண்டகால பிரச்சினைகளான அரசியல் கைதிகளின் பிரச்சினை, காணிப்பிரச்சினை, போன்றவை இன்னமும் தீர்க்கப்படவில்லை.

ஆனால் இவை அனைத்தையுமே புறந்தள்ளி, கூட்டமைப்பு எந்த அடிப்படையில் தமது ஆதரவினை வழங்கினார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளதென என சி.தவராசா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com